காதலின் காவலன் 6,7
அத்தியாயம் 6
சரவணனுக்கு அவளை பார்த்தவுடனே கோபம் தான் வந்தது அவன் கோபத்துடனே வேகமாக நடந்து வர தரையில் ஊற்றியிருந்த பாலை கவனிக்காமல் காலை வைத்துவிட கால் வழுக்கி விழ போக அவன் வந்த அரவத்தில் சத்தம் கேட்டு பெண்ணவள் கண் விழித்தாள் சரவணன் எங்கே கீழே விழுந்து விடுவானோ என்று பயந்து
“சார் பார்த்து” என்று அவள் கூற அவளை பார்த்து முறைத்து வைத்தான் சரவணன் பெண்ணவள் பயமும் பதட்டத்துடனே எழுந்து நிற்க படுக்கையில் இருந்த பூக்களை பார்த்தவனுக்கு கோபம் வர “இப்போ பூ அலங்காரம் ஒன்னு தான் குறைச்சல்” என்று கத்திவிட்டு படுக்கையில் இருந்த போர்வையை தூக்கி எறிந்தான் அதனுடன் ஒரு தலையணையையும் தூக்கி எறிந்தவன் “போய் படு இனி என் கண்ணுல பட்ட உன்னை தொலைச்சிருவேன்” என்றவன் விளக்கை அணைத்துவிட்டு படுத்து கொண்டான்.
வள்ளி அவன் கத்தி பேசியதில் பயத்துடனே சென்று தரையில் படுத்து கொண்டாள் இருவரும் உறங்காமல் வெகு நேரம் விழித்து கிடந்தனர் ‘என்னவெல்லாம் கனவு கண்டேன் ஒரு பன்னிரெண்டாவது கூட பாஸ் ஆகாதவள் போய் என் பொண்டாட்டி எல்லாம் என் நேரம்’ என்று மனதிலேயே புலம்பி கொண்டே படுத்திருந்தான்.
மறுநாள் காலை பொழுது விடிய வள்ளி குளித்து எப்போதும் போல மஞ்சள் பூசி வெளியே வர லதாவும் அவளின் மாமியாரும் சமைத்து கொண்டு இருந்தனர்
“இந்தா மா உன் புருசனுக்கு காபியை போய் கோடு” என்று சரவணன் அன்னை அவள் கையில் டம்ளரை கொடுக்க வள்ளி அதை கையில் கூட வாங்காமல் ஏதோ யோசனையுடன் நின்றிருக்க “வள்ளி” என்று அழைத்தார் அவர் மீண்டும் சுயநினைவுக்கு வந்தவள் காபியை வாங்கி கொண்டு சென்றாள்.
சரவணன் நன்றாக உறங்கி கொண்டு இருக்க அவனை எப்படி எழுப்புவது என்று தெரியாமல் தயங்கி நின்றவள்
மெல்ல “சார் சார்” என்று அழைக்க அவனும் கண் விழித்தான் கண்ணை திறந்தவனின் கண் முன்னே வள்ளியின் முகம் தெரிய அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது
முகம் முழுக்க மஞ்சள் பூசி அடுக்கு மல்லி சூடியிருந்தவளை பார்த்தவனுக்கு கோபம் தான் வந்தது.
சரவணன் எழுந்து கொள்ளும் போதே கோபத்துடனே எழுந்தவன் அவள் கையில் இருந்த காபியை தட்டி விட்டான்
“நான் உன் கிட்ட காபி கேட்டானா எல்லாம் என் நேரம் படிக்க துப்பு இல்லை ரெண்டு வருசமா அதே பன்னிரண்டாம் கிளாஸ்ல உட்கார்ந்து இருக்க ஆனா முகத்துக்கு மட்டும் அரை டஜன் மஞ்சளை அரைச்சி பூசிக்குவ தலையில் பூ வேற ச்சை நேத்தே சொன்னேன் என் கண்ணு முன்னாடி வர்றாதன்னு திரும்ப திரும்ப வந்து எதுக்கு என்னை தொல்லை பண்ற” என்று கத்த அறையின் வெளியே வரை சத்தம் கேட்டது
சரவணன் பெற்றோர் அண்ணன் அண்ணி காதிலும் இது விழுந்தது.
சரவணன் அறையில் இருந்து வெளியே வந்தவன் குளிக்க செல்ல அனைவரும் அவனையே பார்க்க அங்கிருந்த அனைவரையும் பார்த்து முறைத்தவன் குளிக்க சென்றான் வள்ளிக்கு அறையின் உள்ளே இருந்து வெளியே வரவே அவமானமாக இருந்தது கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள்.
சரவணன் பெற்றோருக்கு இப்போது தான் உரைத்தது தெரியாமல் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டோமோ என்று மனக்கவலையாக இருந்தது
சரவணன் குளித்து முடித்துவிட்டு கிளம்பி வெளியே வர அவன் தாய் அவன் அருகில் பேச வந்தார் “தம்பி சாப்பிட வா பா” என்று கூற “எனக்கு எதுவும் வேண்டாம்” என்று கூறிவிட்டு பள்ளிக்கு கிளம்பினான்.
“என்னங்க இவன் இப்படி பேசிட்டு போறான்” என்று சரவணனின் தாய் தன் கணவரிடம் குறை கூற “நான் அப்போவே சொன்னேன் கேட்டியா மனசுக்கு பிடிக்காத ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு எதுக்கு கஷ்டப்படுத்தனும் பாவம் அந்த பொண்ணு” என்க அவருக்கும் வள்ளியை பார்க்க பாவமாக தான் இருந்தது அப்போது அவர் மனதில் திடீரென ஒரு யோசனை தோன்றியது “என்னங்க நம்ம பழைய வீடு சும்மா தான இருக்கு பேசாம நாம இவங்க ரெண்டு பேரையும் அங்க குடி வச்சிடலாமா” என்று கேட்க.
“ஏன் டி உன் மவன் இங்கேயே அந்த பொண்ணை முறைச்சிக்கிட்டு திரியுறான்
தனியா விட்டா விளங்கிடும்” என்றார் சரவணனின் தந்தை “என்னங்க தனியா இருந்தா அவங்களுக்கு கொஞ்சமாச்சும் நெருக்கம் வரும் தனியா அனுப்பி பார்ப்போமே” என்று கூற அவரும் சரியென தலையை ஆட்டினார்.
மறுநாளே அவர்களின் உடைமைகள் இடம் மாற்றப்பட சரவணனும் வள்ளியும் புது குடி பெயர்ந்தனர் சரவணன் வீட்டுக்கு பக்கத்து தெருவில் தான் அந்த வீடு இருந்தது சரவணனுக்கு விருப்பமே இல்லை என்றாலும் அவனின் பெற்றோர் அவனை வற்புறுத்தி அனுப்பி வைத்தனர்.
ஒருவரை வற்புறுத்தி இன்னொருவரின் காதல் நேசத்தை வரவழைக்க முடியுமா…?
வள்ளிக்கு திருமணம் ஆன பின் தாமரை மிகவும் தனிமையை உணர ஆரம்பித்தாள்
வள்ளி வீட்டிலும் அவளுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர் வள்ளி வீட்டில் நல்ல வசதி என்பதால் அவளை மேலும் படிக்க வைக்க அவள் வீட்டில் விருப்பம் இல்லை அதனால் தான் விரைவாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர்.
வள்ளி இடையில் பள்ளிக்கு செல்வதையும் நிறுத்தி இருந்தாள் தாமரை ராஜதுரையும் பார்த்து கொள்வதே அரிதான ஒன்றாக இருந்தது அந்த நேரம் தான் ஊருக்குள் திருவிழாவுக்கு காப்பு கட்டி இருந்தனர்.
ராஜதுரையின் நண்பன் சுடலை தாமரையின் தோழி சுகன்யாவை ஒரு தலையாக காதலிக்க அவளிடம் காதலை திருவிழா முடிய காதலை சொல்வதாக கூறியிருந்தான் அதற்க்காக ராஜதுரையை துணைக்கு அழைத்திருந்தான்.
இரவு நேரம் திருவிழா முடிந்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்க சுகன்யாவும் தாமரையும் பேசிக் கொண்டே நடந்து வந்தனர் “மாப்பிள்ளை எனக்கு பயமா இருக்கு நீயே எனக்காக சுகன்யா கிட்ட பேசுறியா” என்று அவன் கூற
“டேய் என்னாலலாம் முடியாது உன் காதலுக்கு நான் ஏன் தூது போகனும் ஏதோ துணைக்கு கூப்பிட்டன்னு தான் வந்தேன் நான் கிளம்புறேன்” என்றான் ராஜதுரை அங்கிருந்து கிளம்ப போக அவன் கையை பிடித்து கொண்டான் அவன் நண்பன்.
“மாப்பிள்ளை என் வாழ்க்கை பிரச்சனை டா” என்று அவன் கைப்பிடித்து கெஞ்ச அவன் கையில் இருந்த லெட்டரை வேண்டா வெறுப்பாக வாங்கினான் ராஜதுரை “சரி நீ இங்கேயே இரு” என்றவன் சுகன்யாவிடம் செல்ல போக அவள் தாமரையிடம் சொல்லிவிட்டு எங்கோ சென்று விட சரி தாமரையிடம் கடிதத்தை கொடுக்க போக அந்த நேரம் பக்கத்தில் யாரோ பட்டாசு வெடிக்க தாமரை அலறி அடித்து கொண்டு அங்கிருந்த சந்தில் ஓடிச் செல்ல ராஜதுரையும் அவள் அருகில் வந்தான்.
“இதை வச்சிக்கோ” என்று அவள் கையில் கடிதத்தை கொடுக்க அவள் ஒன்றும் புரியாமல் பார்க்க அப்போது சந்தின் உள்ளே ஒரு நாய் உடம்பில் பட்டாசு சுற்றப்பட்டு ஓடி வர சத்தம் கேட்டு பயத்தில்
பெண்ணவள் அவனை இறுக அணைத்து கொண்டாள் நாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கே வர இருவரும் அணைத்து கொண்டு நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அங்கே அனைவரும் வந்தது கூட தெரியாமல் தாமரை ராஜதுரையை அணைத்து கொண்டு நிற்க அவனும் அவளை இறுக அணைத்து கொண்டு நின்றிருந்தான் அவனே அறியாமல் ஊரே இதை வேடிக்கை பார்க்க தாமரையின் தாயும் தந்தையும் அங்கே வந்தனர்.
“இவனையெல்லாம் எப்படி தான் நம்பி காதலிக்கிறாளுகளோ” என்று ஒருத்தி கூற இன்னொருத்தியோ “இவன் அப்பனே இவள் மேல கை வைக்காம இருந்தா சரி” என்று பேசிக் கொண்டு இருந்தனர்.
தாமரையின் தாய்க்கு வந்ததே கோபம் தன் மகளின் அருகில் சென்றவர் அவளின் கையை பிடித்து இழுத்து அவளை அடி வெளுக்க ஆரம்பித்தார் “அம்மா எதுக்கு என்ன அடிக்குற” என்று அவள் கேள்வி எழுப்ப “என்ன டி இது கையில” என்று அவள் கையில் இருந்த காதல் கடிதத்தை பார்த்து கேட்க அவளோ முதுகின் பின்னே கையை வைத்து கொண்டு அவருக்கு காட்டாமல் மறைக்க
அவள் தாய் அதை பிடுங்கினார்.
தாமரையின் தந்தை அதை வாங்கி படிக்க
அந்த காதல் கடிதத்தில் பெயர் குறிப்பிடாமல் இருக்க தாமரைக்கு தான் ராஜதுரை எழுதியிருக்கிறான் என்று நினைத்தார் ராஜதுரை கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஒரு அறைவிட்டார் அடுத்த கணம் தாமரையின் கன்னத்திலும் அறை விழுந்தது “ஊர்ல உனக்கு காதலிக்க வேற எவனுமேவா கிடைக்கல இவன் ஒரு ஆளுன்னு இவனை போய் காதலிச்சிருக்கியே டி பாவி” என்று கேட்க ராஜதுரையின் கண்கள் அவன் நண்பனை தேட அவனோ அங்கிருந்து ஓடியேவிட்டான்
மொத்தத்தில் ஊருக்குள் ராஜதுரையும் தாமரையும் தான் காதலிக்கிறார்கள் என்று நினைத்து கொண்டனர் அனைவரும்.
“உனக்கு ஏன் டி இப்புடி புத்தி போகுது” என்று இன்னொரு அறை தாமரையின் கன்னத்தில் அவள் தாய் அடிக்க “அத்தை அவள் ஒன்னும் தப்பு பண்ணல” என்று ராஜதுரை பேச வர “நீ பேசாத டா முறை செய்ய ஆள் இல்லைன்னு உன்னை கூப்பிட்டோம் பாரு உன் புத்தியை காட்டிட்டல்ல எங்களை சொல்லனும் வாடி” என்று தாமரையின் கையை பிடித்து இழுத்து செல்ல போக “அத்தை மாமா அவள் எந்த தப்பு பண்ணல உங்க மகள் உண்மையாவே நல்லவள்” என்று அவன் கூற.
“ஏன் டா உனக்கு கட்டி கொடுத்து என் பொண்ணையும் பலி கொடுக்க சொல்றியா எதுக்கு டா இப்போ நல்லவன் வேஷம் போடுற ஊர் முன்னாடி எங்க மானத்தை வாங்கிட்டல்ல” என்று கத்தி விட்டு தாமரையை அவளின் தாயும் தந்தையும் இழுத்து சென்றனர்.
தாமரையை வரும் வழியெல்லாம் அவளின் பெற்றோர் அடித்து இழுத்து செல்ல ராஜதுரைக்கு அவளை பார்க்கவே பாவமாக இருந்தது இத்தனை நடந்தும் ஒரு வார்த்தை கூட வாயை திறந்து தாமரை அவனை காதலிக்கவில்லை என்று சொல்லவேயில்லை மூவரும் வீடு வந்து சேர “இனி உன்னை எவன் டி கல்யாணம் பண்ணிக்குவான்” என்று அவளின் தாய் தலையில் அடித்து கொண்டு அழ தாமரையின் தந்தை இடிந்து போய் அமர்ந்து இருந்தார்.
இனி என்ன நடக்குமோ….
அத்தியாயம் 7
ராஜதுரைக்கு இப்போது வரை குழப்பமாக தான் இருந்தது ஏன் தாமரை ஒரு வார்த்தை கூட அவள் தாய் தந்தையிடம் மறுத்து பேசவில்லை என்று அவளின் இந்த நிலைக்கு தான் தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சியுடன் நின்றிருந்தான்.
அதேநேரம் தாமரையின் தந்தை தாமரையின் கையை பிடித்து இழுத்து சென்று அவளை அறையின் உள்ளே தள்ளி கதவை அடைத்து வெளியே பூட்டி வைத்தார் “அவள் எதுக்காகவும் இந்த அறையை விட்டு வெளிய வரவேக்கூடாது அவள் படி தாண்டுனா ஆத்தா மகள் ரெண்டு பேர் காலையும் வெட்டுவன், இன்னும் ஒரே வாரத்துல அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பேன் யாரை காட்டுறனோ அவனுக்கு அவள் கழுத்தை நீட்டனும் கேட்டுச்சா” என்று அறையின் உள்ளே இருந்த தாமரைக்கு கேட்டுக்கும் வண்ணம் பேசியவர் அங்கிருந்து வெளியே சென்றார்.
அறையின் உள்ளே இருந்த தாமரை கத்தவில்லை ஏன் அழ கூடவில்லை எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருந்தது.
அவள் தந்தை சென்ற பின் கதவை திறந்து அவளின் தாய் உள்ளே வந்தார் “ஏன் டி அறிவுக் கெட்டவளே சும்மா பொய்க்குவாது நான் அவனை விரும்பலன்னு உங்க அப்பன் கிட்ட சொல்ல வேண்டியது தான டி” என்று கூறிக் கொண்டே அழ “நான் ஏன் பொய் சொல்லனும் நான் கட்டுனா அவனை கட்டிப்பேன் இல்லை கழுத்தறுத்துட்டு செத்து போய்டுவேன்” என்று தீர்க்கமான பார்வையுடனே கூற அவளின் தாய்க்கு வந்ததே கோபம் பக்கத்தில் இருந்த துடப்பத்தை எடுத்து அடி பின்னி விட துடப்பம் தான் பிய்ந்து கீழே விழுந்ததே தவிர அடி வாங்கியவளின் கண்ணீல் இருந்து ஒரு துளி கண்ணீர் வெளியே வரவில்லை.
அவள் தாய்க்கே அவளை பார்க்க பாவமாக இருக்க அவளின் அருகில் வந்தவர்
“என் சாமில்ல அவன் உனக்கு வேணாம் டி அம்மா அப்பாகிட்ட பேசுறேன் உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து வைக்கிறேன் நீ சரின்னு மட்டும் சொல்லு” என்று கூறிவிட்டு அவள் முகத்தை பார்க்க
“நீங்க அடிச்சாலும் கொன்னாலும் அவனை தான் நான் கட்டிப்பேன் என் கழுத்துல தாலின்னு ஒன்னு ஏறுனா அது ராஜதுரை கையால மட்டும் தான்” என்றாள்
அவள் பதிலை கேட்ட அவளின் தாயின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது
“உன்னை கொன்னா தான் நீ அடங்குவ” என்று கத்தியவர் பக்கத்தில் கிடந்த அவர் கணவரின் பச்சை நிற பெரிய பெல்ட்டை எடுத்து அவள் சதையே கிழிந்துவிடும் அளவுக்கு அடிக்க அவளோ அழவில்லை கத்தவில்லை மாறாக அத்தனை வலியையும் இதழ் கடித்து பொறுத்து கொண்டாள் அவள் பற்தடம் பட்டு கீழ் உதட்டில் இருந்து ரத்தம் கூட கசிந்தது ஒரு கட்டத்தில் அவள் தாயே அவளுக்கு பாவம் பார்த்து பெல்ட்டை தூக்கி எறிந்தவர் தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்தார் “எதுக்கு டி இப்படி அடி வாங்கி சாவுற பாவி மகளே ஒரு வேலை கூட செய்ய விடாம பொத்தி பொத்தி வளர்த்தனே” என்று அழுக அவள் முடிவுடன் தான் இருந்தாள் உடலில் அத்தனை ரத்த காயங்கள் இருந்தும் சோர்ந்து போய் துவண்டு விழாமல் சுவரையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்.
சரவணனின் இல்லம்…
சரவணனும் வள்ளியும் தனிக் குடித்தனம் வருவதற்க்காக பொருட்கள் அனைத்தும் காலையிலேயே மாட்டு வண்டியில் எடுத்து வந்து புது வீட்டில் இறக்கி வைக்கப்பட்டன சரவணன் பெற்றோர் கிளம்பி விட வள்ளி சமயலறையில் அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தாள் சரவணன் பெரிய பொருட்கள் அனைத்தையும் மூட்டை கட்டி எடுத்து வைத்து கொண்டு இருந்தான்.
கட்டிலில் மலைபோல் கிடந்த சரவணனின் உடைகளை கோபத்துடனே மடித்து வைத்து கொண்டு இருந்தான் “இப்போ எதுக்காக இரண்டாவது நாளே தனிக் குடித்தனம் அனுப்பி வச்சு என் உயிரை எடுக்குறாங்க” என்று புலம்பிக் கொண்டே அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தான்
சமையலறை பாத்திரங்கள் சிலவற்றை படுக்கையறையின் உள்ளே வைத்திருக்க வள்ளி அதை எடுப்பதற்க்காக வந்தாள்
சரவணன் அதை ஏதோ தேவையில்லாத மூட்டை என்று நினைத்து பரன் மேலே எடுத்து வைத்திருக்க சத்தமில்லாமல் ஒரு மர ஸ்டூலை போட்டு அதன் மேலே ஏறி எடுக்க முயன்றாள் அப்போது ஏதோ எடுப்பதற்க்காக நடந்து வர நிலை தடுமாறி
அவன் மீதே விழுந்தாள்.
அவள் விழுந்த வேகத்தில் இருவரும் படுக்கையில் இருந்த மெத்தை மீது விழுந்தனர் அதனால் இருவருக்கும் பெரிதாக அடி படவில்லை பெண்ணவள் சரவணன் மீது விழுந்து கிடக்க அவளின்
முன்னெழில்கள் அவன் நெஞ்சில் அம்பாக
பாய்ந்து இதயத்தை குத்தி கிழித்து பதம் பார்த்தது அவளின் ஒற்றை நெற்றி முடியின் அசைவில் கிறங்கி தடுமாற ஆரம்பித்தான் இத்தனை நாள் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவன் முதல் முறையாக ஒரு பெண்ணாள் அவன் சலனப்பட ஆரம்பித்தான் ஒரே ஒரு கணம் மட்டுமே தடுமாறினான் அடுத்த கணம் அவளின் இடையை வளைத்து பிடித்து எழுப்பி நிற்க வைத்தவன்.
“ஏன் டி அறிவு கெட்டவளே கண்ணை எங்க வச்சிருக்க மேல வந்து விழுற இப்படி விழுந்தா நான் மயங்கிடுவேன்னு உனக்கு எவன் டி சொன்னா” என்று கேட்க
“சார் நான் மேல இருந்த பாத்திரத்தை தான் எடுக்க வந்தேன் நீங்க தான் என் வந்து விழுந்திங்க” என்று கூற சரவணனுக்கு வந்ததே கோபம் அவளின் காதை பிடித்து திருகினான் “சார் மோருன்னு இனிமே கூப்பிட்ட தொலைச்சிருவேன்” என்க
“ஆஆஆ வலிக்குது சா..” என்று வாய் வரை வந்த வார்த்தையை தடுத்து நிறுத்தியவள்
“வலிக்குது விடுங்க” என்று கண்கள் அவள் காதில் இருந்து கையை எடுத்தான் அவனை பார்த்து முறைத்தவள் தான் எடுக்க வந்த பாத்திரத்தை எடுத்து கொண்டு சத்தமே இல்லாமல் வெளியே செல்ல
“ஏய் நில்லு டி” என்று கூற பெண்ணவள் பயத்துடனே திரும்பினாள்.
“ஆமாம மாமியார் வீட்ல இருந்து வெளிய வந்துட்டோம்ன்னு ஜாலியா இருக்க மாதிரி தெரியுது ஒழுங்கா நாளையில இருந்து பள்ளிக்கூடம் கிளம்புற வழியை பாரு ஒழுங்கா படிச்சு இந்த வருசம் பாஸ் ஆகுற இல்லைன்னா வாத்தியார் பொண்டாட்டி மக்குன்னு ஊரே பேசும் புரியுதா” என்று கேட்க “புரியுதுங்க” என்று அவள் வேக வேகமாக தலையை ஆட்டி வைக்க “என்ன புரிஞ்சுது” என்று அவன் கேட்க
“வாத்தியார் பொண்டாட்டி மக்குன்னு சொல்லுவாங்க” என்று அவள் கூற விறுவிறுவென அவள் அருகில் வந்து தலையில் நறுக்கென்று கொட்டி வைத்தவன் “அறிவுகெட்டவளே இவ்வளவு பேசுனேன் இது மட்டும் தான் உன் காதுல விழுந்துச்சா ஒழுங்கா என் பாடத்துல பாஸ் ஆகுற வழியை பாரு” என்று கூற அவளும் தலையை கையால் தடவிக் கொண்டே தலையை ஆட்டினாள்.
அவன் வெளியே செல்ல “எந்த நேரத்துல இந்த கணக்கு வாத்தியை கட்டினனோ அப்போவே என் நிம்மதி போச்சு” என்று புலம்பிக் கொண்டே கண்ணீருடன் துணியை துவைத்து கொண்டு இருந்தாள்.
மறுநாள் காலை சரவணன் பள்ளிக்கு கிளம்ப வள்ளி இருவருக்கும் சமைத்து முடித்து மதிய உணவை டப்பாவில் அடைத்து வேலையை முடித்து யூனிபார்ம் தாவணி பாவடையுடன் வியர்த்து வடிய மஞ்ச பையை எடுத்து கொண்டு வர அவள் கணவனோ அவளின் எதிரே கூலாக விசிலடித்து கொண்டே தன் முழங்கை சட்டையை மடித்து விட்டு கொண்டே நடந்து வந்தான்.
அவனுக்கான மதிய சாப்பாடு டப்பாவை அவன் கையில் கொடுக்க “என்னது இது” என்று அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க “மதிய சாப்பாடு சா” சார் என்று கூற வந்து நாக்கை கடித்து தடுத்தவள் “மதிய சாப்பாடுங்க” என்று கூறிவிட்டு அவள் வெளியே கிளம்ப போக “காலையில சாப்பாடு யாரு உங்க அப்பன் கந்தன் வந்து போடுவானா” என்று கேட்க “அது இல்லைங்க பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு” என்று அவள் கூற
“ஆமா அப்படியே பள்ளிக்கூடத்துக்கு சீக்கிரமா போய் மொத பென்ஜில உட்கார்ந்து படிச்சி கிழிச்சி பாஸ் ஆக போற போய் படிக்குற பசங்களை வேடிக்கை தான பார்க்க போற எனக்கு சாப்பாடு போட்டுட்டு போ” என்று கூற
சரவணன் வந்து அமர்ந்தான்.
வள்ளி அவனுக்கு சாப்பாடு எடுத்து வந்து பரிமாறி அவன் சாப்பிடும் வரை காத்திருக்க அவன் வேண்டுமென்றே பொறுமையாக சாப்பிட ஒரு வழியாக வேக வேகமாக நடந்து அவள் பள்ளிக்கு வந்து சேர்ந்தாள் ஆனால் அவளுக்கு முன்பே சரவணன் பள்ளிக்கு சென்றுவிட்டான்.
வள்ளி பள்ளி வாசலில் வந்து நிற்க கேட்டின் வெளியே நிற்க வைக்கப்பட பாவமாக நின்றிருந்தாள் ஒரு அரை மணி நேரம் அனைவரும் நிற்க வைத்து வசைபாடிய பின் தான் அவளின் உடற்பயிற்சி ஆசிரியர் அவளை உள்ளேயே அனுமதித்தார் எப்படியோ அவள் தன் இருக்கையில் சென்று அமர சரவணனின் பாட வேளை வந்தது.
அவன் உள்ளே வர அனைவரும் எழுந்து நின்றனர் ஆனால் வள்ளியோ கடைசி இருக்கையில் அமர்ந்து உறங்கி கொண்டு இருந்தாள் நேற்று முழுவதும் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து அடுக்கி உறங்கவே இரவு இரண்டானது அதனால் அசதியில் அவள் உறங்கியிருக்க சரவணனின் பார்வை அவளிடம் சென்றது அவளை முறைத்து அவளின் பக்கத்தில் இருந்த அவளின் வகுப்பு தோழி
அவளை உலுக்கி எழுப்ப வள்ளி மெல்ல கண்ணை திறந்தாள் அப்போது தான் கவனித்தாள் தன் எதிரே நின்றிருந்த சரவணனை உடனே அடித்து பிடித்து கொண்டு அவள் எழுந்து கொள்ள சரவணன் இன்னும் அவளை கையை கட்டிக் கொண்டு முறைத்து பார்த்து கொண்டு இருந்தான்.
“வீட்ல நல்லா சாப்பிட வேண்டியது முகத்துல ஒரு டஜன் மஞ்சளை அரைச்சி பூசிக்க வேண்டியது அப்புறம் மதியம் ஸ்கூல்ல வந்து சாப்பிட்டு எவனோ பைத்தியக்காரன் வந்து பாடம் நடத்தி கத்திட்டு போறான்னு படுத்து தூங்க வேண்டியது நீயெல்லாம் எதுக்கு பள்ளிக்கூடத்துக்கு வந்து என் உயிரை எடுக்குற வெளியே போ” என்று தன் சொந்த வெறுப்பை அவள் மீது கொட்ட பெண்ணவள் உம்மென்று முகத்தை வைத்து கொண்டு வெளியே சென்றாள்.
அன்றிலிருந்து தினமும் அவள் பள்ளிக்கு வரும் போது எல்லாம் அவளை திட்டுவதும் அடிப்பது மாக தன் சொந்த வெறுப்பை காட்டி கொண்டு இருந்தான் சரவணன்.