மன்மத லீலை 11,12
அத்தியாயம் 11
அனு தன் தாயுடன் மாதாந்திர செக்கப்புக்காக வந்திருந்தாள் அவளை பார்த்த நிரஞ்சனா “ஹேய் அனு” என்று கத்தி அவளை பார்த்து கையசைக்க அவளோ கண்டுகொள்ளாமல் அங்கிருந்து தன் தாயுடன் விரைவாக சென்றுவிட்டாள்
நிரஞ்சனா ஒன்றும் புரியாமல் நின்றிருக்க அனு தன் தாயை அனுப்பிவிட்டு மீண்டும் ஓடி வந்தாள் “சாரி டி சாரி அம்மா உன்னை பார்த்தாங்கன்னா பிரச்சனை ஆகும் அதனால தான் கண்டுக்காத மாதிரி போனேன்” என்றாள் அனு மூச்சிறைக்க
“ஏன் உங்க அம்மா என்னை பார்த்தா என்ன” என்று நிரஞ்சனா கேட்க “இந்த மாதிரி நீ இருக்கும் போது பார்த்தா ஏதாச்சும் சொல்லுவாங்க” என்று கூற நிரஞ்சனா அப்போது தான் தன் மேடிட்ட வயிற்றை கவனித்தாள்.
நிரஞ்சனாவின் முகம் அவள் பதிலில் உடனே வாடிவிட்டது பொங்கி வரும் அழுகையை அடக்கியவள்
“ஒன்னும் பிரச்சனை இல்லை அனு நீ அம்மாவை பாரு” என்று கூறிவிட்டு வாடிய முகத்துடனே நடந்து கார் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்து சேர்ந்தாள் அவளை பார்த்த மன்மதன் கார் கதவை திறந்து விட அவளும் உள்ளே ஏறி இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அவளின் முகம் வாடி இருப்பதை பார்த்த மன்மதனுக்கு புரிந்து போனது நிச்சயம் அனு அவளை ஏதோ சொல்லி காயப்படுத்தி இருக்கிறாள் என்று அதை பற்றி அவன் கேட்கவில்லை கண்கள் கலங்க அமர்ந்து இருந்தவள் “பக்கத்துல ஏதாச்சும் கோவில் இருந்தா காரை விடுங்களேன்” என்று கூற
அவனும் சரியென தலையை ஆட்ட கோவிலின் வாசலில் வந்து காரை நிறுத்தினான்.
அனு காரில் இருந்து இறங்கி செல்ல மன்மதனும் பின்னே துணைக்கு வந்தான்
அங்கிருந்த கடவுளின் முகத்தை பார்த்த நிரஞ்சனாவின் கண்களில் இருந்து கண்ணீர் கரை புரண்டு ஓடியது ‘நான் உனக்கு என்ன பாவம் பண்ணுனேன் எனக்கு ஏன் இப்படி ஒரு நிலமை என் குழந்தை பிறக்குறதுக்குள்ள என்னோட இந்த நிலைக்கு காரணம் யாருன்னு எனக்கு தெரியனும் அப்படி தெரியலன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் கையில குழந்தையோட இந்த உலகத்தை எதிர்கொள்ற அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை’ என்று மனதில் வேண்டிக் கொண்டு இருக்க மன்மதன் காதில் அது வந்தடைந்தது மனதில் நினைப்பதை கேட்க்கும் அளவுக்கு வல்லமை அவனுக்கு இருந்தது அவள் கூறியதை கேட்டு அவன் தலையில் இடி வந்து இறங்கியது அவளிடம் சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவித்தான்.
அவள் அழுவதை பார்த்து அணைத்து ஆறுதல் கூற வேண்டும் என்று அவன் கை பரபரத்தது இருப்பினும் தன் இயலாமையை நினைத்து அவனும் கண்ணீர்விட்டான் அவள் கண்ணீரை துடைத்து கொண்டு மீண்டும் வெளியே வர
எதுவும் பேசாமல் இருவரும் வீட்டுக்கு பயணம் செய்தனர் நாரதனுக்கு வானில் இருந்து அனைத்தையும் பார்க்க பார்க்க பாவமாக இருந்தது பெண்ணவள் மீது இரக்கம் சுரந்தது தன் மாயையை செய்ய ஆரம்பித்தார்.
நாட்களும் நகர ஆரம்பித்தது மன்மதன் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்க ஆரம்பித்தான் ஒரு வேலை செய்ய விடாமல் தானே அனைத்தையும் செய்ய ஆரம்பித்தான் ஒரு கட்டத்தில் அவள் ஒன்பது மாதங்கள் தொடும் சமயம்
தனிமையில் இருந்து ஏங்கி அழ ஆரம்பித்தாள் அவளின் மனதில் அவளே அறியாமல் மன்மதன் நினைவு வந்தது ஆனால் அவளுக்கு தான் அது தெரியவில்லை.
நிறை மாத நேரத்தில் கவனித்துக் கொள்ள ஆள் இல்லாமல் தவித்தாள் அவளை பார்த்து மன்மதனும் மனம் வருந்தினான் ஒரு நாள் அவளுக்கு வலி ஏற்பட மன்மதன் அவளை அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தான் அன்று இரவு முழுக்க அவள் வலியில் மறுநாள் காலை நிரஞ்சனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது அவளை அறைக்கு மாற்றிய பின் மன்மதன் அவளை பார்க்க சென்றான்.
மன்மதன் அறையின் கதவை திறந்து உள்ளே வர நிரஞ்சனா அவனை பார்த்தவள்
அதிர்ச்சியடைந்தாள் ஆம் அவளுக்கு அனைத்தும் நினைவு வந்திருந்தது அவன் தான் அவளின் கணவன் காதலன் தன் பிள்ளையின் தகப்பன் என்று “மதன்” என்று அதிர்வுடனே அழைக்க “என் கண்ணே” என்று அவள் அருகில் ஓடி வந்தான் மன்மதன் “உனக்கு எல்லாம் நியாபகம் வந்துடுச்சு நிரஞ்சனா” என்று கேட்க அவளுக்கு இத்தனை நாள் தான் பட்ட அவமானமும் நினைவுக்கு வந்தது.
அவன் தன் மகளை ஆவலுடனே தூக்க போக “தொடாதிங்க என் குழந்தையை தொடாதிங்க” என்று கர்தினால் நிரஞ்சனா
மன்மதன் உடனே அதிர்வுடனே அவளை பார்க்க “என்னாச்சு உனக்கு” என்று கேட்க
“எதுக்காக அன்னைக்கு காலையில விட்டுட்டு போனிங்க” என்று அவள் கேட்க
“அது ஒரு பெரிய கதை நிரஞ்சனா நான் சொல்றேன்” என்று பேசிக் கொண்டு இருக்க அந்த அறையின் கதவை திறந்து கொண்டு அனு மற்றும் நிரஞ்சனாவின் தாய் தந்தை இருவரும் வந்தனர்.
“மதன் நீ இங்க தான் இருக்கியா நீ இங்க என்ன பண்ற” என்று அனு கேட்க
நிரஞ்சனாவின் பெற்றோருக்கும் அதிர்ச்சி தான் அவர்களும் அவனை அதிர்வுடனே பார்க்க “அவரு தான் என் குழந்தைக்கு அப்பா” என்று கூற மறுகணம் மன்மதன் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஒரு அறைவிட்டார் அவளின் தந்தை
“அடப்பாவி கூடவே இருந்து குழி பறிச்சிட்டல்ல எதுக்கு டா என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்த பாவி” என்று கத்த.
நிரஞ்சனாவின் தாய்க்கும் இது அதிர்ச்சி தான் ஏனெனில் அவளின் பெற்றோர் இருவரும் அவனை நிரஞ்சனாவின் நண்பன் என்று தான் நினைத்தனர் அவன் நிரஞ்சனாவை கெடுத்துவிட்டான் என்று நினைத்து கொண்டனர் இருவரும் காதலுடன் தான் இணைந்தார்கள் என்று ஒரு அவர்களுக்கு தெரியவில்லை.
நிரஞ்சனாவின் மனதிலோ அவன் தன்னை ஏமாற்றி விட்டுச் சென்று விட்டான் என்ற எண்ணம் பதிந்து இருந்தது அவன் அவளிடம் வேலைக்கு வந்து சேர்ந்தது அவளுடனே இருந்தது எதுவும் அவள் நினைவில் இல்லை.
மன்மதனை நிரஞ்சனாவின் தந்தை அடித்து வெளியே துரத்தி விட “சார் நான் சொல்றதை கேளுங்க நான் என் பொண்ணை ஒரே ஒரு தடவை பார்க்கனும் பிளீஸ் சார்” என்று அவன் கெஞ்ச ஒரு பொண்ணை கெடுத்துட்டு இப்போ குழந்தைக்கு அப்பான்னு சொல்லிட்டு வந்து நிக்குறியா “போ டா வெளியே” என்று மருத்துவமனை வெளியே அவளை இடித்து தள்ளினார்.
மன்மதன் அவரை கோபத்துடனே முறைத்தவன் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றான் மீண்டும் அவன் வானுலகில் வந்து சோகத்துடனே அமர்ந்திருக்க அவன் அருகில் நாரதன் வந்தார் “என்னவாயிற்று மன்மதா ஏன் மீண்டும் சோகமாக அமர்ந்திருக்கிறாய் உன் மனைவி மகளை பார்த்தாயா இல்லையா உன் மனைவியிடம் உன் காதலை சொன்னாயா” என்று கேட்க “ஆமா இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்” என்று மன்மதன் கேட்க மன்மதன் நமட்டு சிரிப்பு சிரிக்க அவனுக்கு புரிந்து போனது இது நாரதன் வேலை தான் என்று
“என் பொண்டாட்டிக்கு பழைய நியாபகம் தான் வர வச்சுங்க அதை முழுசா வர வச்சிருக்கலாமே நாரதா” என்று கேட்க.
“என்ன மன்மதா இப்படி கூறிவிட்டாய் நான் எதையும் செய்யவில்லை மகா முனிவரிடம் இதையெல்லாம் சொல்லி வைக்காதே அதன் பின் எனக்கும் ஒரு சாபத்தை கொடுத்து விடுவார்” என்று கூற மன்மதன் அவரை முளைத்து பார்த்தவன்
“உங்க நாரதர் வேலையை ஆரம்பிச்சிட்டிங்களா” என்று அவன் கேட்க.
“முழு நேர மானுடனாகவே மாறிவிட்டாய் மன்மதா” என்றார் நாரதன் “இப்போ என்ன தான் பண்றது நாரதரே என் பொண்டாட்டி கூட என்னை சேர்த்து வையுங்க” என்று கூற
“மன்மதனுக்கு உனக்கு நான் காதலிக்க கற்று தர வேண்டுமா” என்று கூறிவிட்டு அவர் சிரிக்க அவன் மீண்டும் அவரை முறைத்து பார்த்தான்.
“காதல் தேவன் உனக்கு உன் மனைவியை காதலிக்க வைக்க தெரியாதா முயற்சி செய் மன்மதா” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல சரியாக ஒரு வாரத்துக்கு பிறகு நிரஞ்சனாவை டிஸ்சார்ஜ் செய்தனர்.
தன் வீட்டுக்கு வந்த அன்றைய இரவு நிரஞ்சனா கையில் உறங்கும் பிள்ளையுடன் கண்ணீருடன் ஜன்னல் வழியாக வானில் தெரிந்த நிலவை ஏக்கத்துடனே பார்த்து கொண்டு இருந்தாள் அவளின் தாய் தரையில் படுத்து உறங்கி கொண்டு இருந்தார் அப்போது சத்தமே இன்றி அறையின் உள்ளே திடீரென வந்து நின்றான் இடையில் இடைஞ்சலாக இருந்த நிரஞ்சனாவின் தாயை மாயம் செய்து பக்கத்து அறையில் படுக்க வைத்தவன்.
பெண்ணவள் அருகில் வந்து சத்தமே இன்றி அமர்ந்தான் மன்மதன் வந்து அமர்ந்ததை பெண்ணவள் உணரவில்லை அவள் கையில் இருந்த பிள்ளையை தன் கைக்கு இடம் மாற்ற அதை கூட உணராது பெண்ணவள் அமர்ந்திருந்தாள் தன் மகளின் கன்னத்தில் முத்தமிட்டு தொட்டிலில் படுக்க வைத்து விட்டு திரும்ப நிரஞ்சனா அப்போது தான் மன்மதனையே பார்த்தாள் “நீ எதுக்கு இங்க வந்த” என்று கேட்க “நான் உன்னை பார்க்க தான் வந்தேன் நிரஞ்சனா என்னால் நீயில்லாமல் தனித்து இருக்க முடியவில்லை” என்று கூற
“தனியா இருக்க முடியாதவரு தான் என்னை விட்டு போனிங்களா உங்களால நான் எவ்வளவு அசிங்கப்பட்டேன்னு தெரியுமா” என்று அவள் கேட்க.
“எல்லாம் எனக்கு தெரியும் என்னை மன்னித்துவிடு” என்று அவளின் கையை பிடிக்க போக அவன் கையை அவள் உதறி தள்ள அவள் தன் உடலை அசைத்ததில்
அவள் அணிந்திருந்த நைட்டியின் ஜீப் குழந்தைத்கு பசியாற்றிய பின் மூடப் படாமல் இருக்க அவளின் இரட்டை மாங்கனிகளில் அவன் கண்கள் சென்றது.
ஒரு நிமிடம் தான் என்ன பேச வந்தோம் என்பதை மறந்து மெய் மறந்து போய் நிற்க
மன்மதன் ஒன்றும் பேசாமல் நிற்க அவனை அப்போது தான் கவனித்தாள் பெண்ணவள்
அவன் பார்வை சென்ற இடத்தையும் கவனித்து பின்னே திரும்பி நின்று கொண்டாள் அப்போது தான் அவன் சுயநினைவுக்கே வந்தான் மன்மதன் “என்னை மன்னித்துவிடு நான் ஏதோ தெரியாம நீ இப்படி ஒரு கோலத்துல வந்து நின்னா நான் என்ன பண்ணுவேன் அது தான் கொஞ்சம் தடுமாறிட்டேன்” என்று கூற பின்னே திரும்பி நின்றவளுக்கு கோபத்துக்கு பதிலாக கூச்சம் தான் வந்து தொலைத்தது.
அத்தியாயம் 12
“கொஞ்சம் கூட அறிவேயில்லை” என்று திட்டிக் கொண்டே நிரஞ்சனா தன் ஆடையை சரி செய்தவள் மீண்டும் திரும்பி நின்றாள் “இப்போ என்ன வேணும் உங்களுக்கு” என்று அவள் கோபத்துடனே அவனை பார்த்து கேட்க “நான் சொல்லுவேன் ஆனா அதை உன்னால தர முடியாது” என்றான் எதையோ மனதில் வைத்து கொண்டு “என்னன்னு சொல்லுங்க” என்று அவள் மீண்டும் கேட்க அவளின் இடையை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்தணைத்து பிடித்தவன் அவள் உயரத்துக்கு குனிந்து அவளின் காதில் தன் மீசை முடி உரச சூடான மூச்சுக்காற்று டன் வில்லங்கமாக எதையோ கூற பெண்ணவளின் முகம் உடனே சிவந்து போனது அவனை பிடித்து தள்ளியவள்
“கொஞ்சமாவது அறிவு இருக்கா உங்களுக்கு குழந்தை பிறந்து ஒரு வாரம் தான் ஆகுது அதுக்குல்ல….” என்று கூறிவிட்டு அவனை பார்த்து முறைத்தவள் “முதல்ல இந்த ரூம்மை விட்டு வெளியே போங்க” என்று அவள் கத்த
“நிரஞ்சனா நான் அன்னைக்கு உன்னை விட்டுட்டு போனது தப்பு தான் அதுக்கு காரணம் இருக்கு” என்று அன்று நடந்த அனைத்தையும் கூற போக “நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்” என்று நிரஞ்சனா அவனை தடுக்க.
மன்மதன் “முதல்ல நான் என்ன சொல்ல வரேன்னு கேளு நிரஞ்சனா” என்றவன் அன்றைய நாள் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கூற
“ஓஹோ எவனோ ஒரு சாமியார் சொன்னன்னு என்னை விட்டுட்டு போய்ட்டிங்களா” என்று அவள் கோவப்பட மன்மதன் அதற்க்கு மேல் முடியாமல் அவள் காலிலேயே நெஞ்சாங்கிடையாக விழுந்தான் “அவரு சாமியார் இல்லை மகாமுனிவர் அவரு சாபம் கொடுத்தா அவ்வளவு தான் நீயும் நானும் சேரவே முடியாது” என்றவன் அவள் காலை பிடித்து கொண்டே விழுந்து கிடக்க “தயவு என்னை மன்னிச்சிடு டி நான் உன்னை விட்டுட்டு போனது தப்பு தான்” என்று கூற நிரஞ்சனா அசையாமல் நின்றிருந்தாள்.
“வெளிய போங்க” என்றாள் அவன் முகம் பார்க்காமல் மன்மதன் எழுந்து நின்று அவளை முறைத்து பார்த்தவன்
அங்கிருந்து வெளியே செல்லாமல் படுக்கையில் சென்று ஓய்யாரமாக படுத்து கொண்டான் “போக முடியாது உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்றான் மன்மதன் படுக்கையின் மறுபுறம் படுத்து உறங்க ஆரம்பித்தான்.
நிரஞ்சனா அவனை வாய்க்குள்ளேயே திட்டிக் கொண்டு வந்து அவன் பக்கத்தில்
படுத்து கொண்டாள் “இந்த பூலோகத்துல வாக்கப்பட்டு நான் படுற அவஸ்தை இருக்கே யோவ் மகாமுனிவா எல்லாம் உன்னால” என்று அவன் புலம்பிக் கொண்டே படுத்து இருக்க அவன் மீது தலையணையை தூக்கி எறிந்தாள் நிரஞ்சனா “இது வேறயா” என்று தலையணையை தூக்கி எறிந்த மன்மதன் அதன் பின் எதுவும் பேசாமல் படுத்திருக்க நிரஞ்சனா பிள்ளையை பார்த்து கொண்ட சோர்வில் உறங்க ஆரம்பித்தாள்.
மன்மதனுக்கு தான் உறக்கம் வர மறுத்தது இனி இவளை எப்படி சமாளிப்பது அந்த மகாமுனிவன் தவம் கலந்து வந்தால் என்ன நடக்கும் என்ற யோசனையுடனே படுத்திருந்தான் அதை நினைத்தே அவனுக்கு உறக்கம் வரவில்லை இரவெல்லாம் விழித்து கிடந்தான் காலை வேளையில் உறங்க ஆரம்பித்தான்.
மறுநாள் காலை பொழுது மெல்ல விடிய நிரஞ்சனா அழும் பிள்ளையை சமாளிக்க முடியாமல் கையில் வைத்து கொண்டு இருக்க மன்மதன் குப்பற படுத்து உறங்குவதை பார்த்தவளுக்கு கோபம் தலைக்கு ஏற நிரஞ்சனா தன் பக்கத்தில் இருந்த தண்ணீர் டம்ளரில் இருந்த தண்ணீரை அவன் முகத்தில் எடுத்து ஊற்றினாள் அதில் அடித்து பிடித்து கொண்டு எழுந்தமரந்தான் மன்மதன்.
நிரஞ்சனா பிள்ளையை கையில் வைத்து கொண்டு அவனை பார்த்து முறைக்க
மன்மதனின் பார்வை தன் மகளிடம் சென்றது “என் தங்கமே நீங்க எப்போ எழுந்திங்க” என்று அழும் மகளை தன் கையில் தூக்கி கொள்ள அவன் கையில் வந்த நொடி அவன் மகள் அழுவதை நிறுத்தியிருந்தாள் நிரஞ்சனாவுக்கு உடனே கோபம் வர “என் குழந்தையை கொடு” அவன் கையில் இருந்த பிள்ளையை அவள் வெடுக்கென வாங்க குழந்தை மீண்டும் வீல்லென்று அழுதது.
பக்கத்து அறையின் படுத்திருந்த நிரஞ்சனாவின் தாய் குழந்தையின் அழுக்குரல் கேட்டு கண்விழித்தார் தான் பக்கத்துக்கு அறையில் எப்போது வந்து படுத்தோம் என்று யோசித்தவர் படுக்கையில் இருந்து எழுந்து பக்கத்து அறைக்கு சென்றார்.
அங்கே மன்மதன் படுக்கையின் படுத்திருப்பதையும் மகள் அழும் பேத்தியை கையில் வைத்திருப்பதையும் பார்த்தவர்
“நீ எப்போ வந்த” என்று அவர் மன்மதனை பார்த்து “நைட்டே வந்துட்டனே அத்தை” என்று அவன் கூற அவருக்கு வந்ததே கோபம் “நீ யாரு டா என்னை அத்தன்னு கூப்பிட மரியாதையா என் வீட்டை விட்டு வெளியே போ” என்று அவர் கோவப்பட
மன்மதனின் முகம் வாடியது “அத்தை நான் என்ன சொல்ல வரேன்னு முதல்ல கேளுங்க” என்று மன்மதன் கூறிக்கொண்டு இருக்க “முதல்ல போலீஸ்க்கு போன் பண்றேன் என் பொண்ணை கெடுத்துட்டு என் வீட்டு பெட்லையே வந்து படுத்திருக்கியா” என்று கூறிக் கொண்டே போனை எடுத்தவர் காவல் நிலையத்துக்கு அழைக்க போக.
“அம்மா அவருக்கு கொஞ்சமாச்சும் மரியாதை கொடுத்து பேசுங்க என்ன இருந்தாலும் அவரு புருசன்” என்று நிரஞ்சனா கோவப்பட “என்னது புருசனா” என்று அவர் வாயை பிளக்க “ஆமா எங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு” என்றாள் நிரஞ்சனா இப்போது அதிர்ச்சி மன்மதனுக்கு தான் அவன் அவளை ஏறிட்டு பார்க்க.
“வயித்துல பிள்ளையோட உன்னை விட்டுட்டு எங்கையோ ஓடி போனவன் தான டி பெரிய புருசனாம் புருசன்” என்று அவள் தாய் கேட்க “நீங்களும் அப்பாவும் தான் என்னை விட்டுட்டு போனிங்க பெருசா என் கூட இருந்த மாதிரி பேசுறிங்க எட்டு மாசத்துல இருந்து அவரு தான் என் கூட இருந்தாரு இப்பவும் இருக்காரு சின்ன வயசுல இருந்து ஒரு நாளாவது நீங்களும் அப்பாவும் என் கூட இருந்திங்களா எப்பவும் ஹாஸ்ட்டல்ல தான இருப்பேன் என்னை வந்து கூட பார்க்க உங்களுக்கு நேரம் இருக்காது இப்போ என்ன புதுசா பாசம் உங்களுக்கு போங்க மா போய் உங்க பிஸ்னஸ்சை பாருங்க” என்றாள் நிரஞ்சனா கோபத்துடனே.
“ஓஹோ உனக்கு அவன் தான் முக்கியமா போய்ட்டான் நாங்க உங்களுக்கு வேண்டாம் அப்படி தான” என்று அவர் கேட்க “இப்பவும் நீங்க அவரை மரியாதை இல்லாம தான் பேசுறிங்க அவரு இந்த வீட்டு மாப்பிள்ளை குறைஞ்சபட்ச மரியாதை கொடுத்து பேசுங்க எனக்கு உங்களை விட அவரு தான் முக்கியம்” என்றாள் கோபத்துடனே.
“அப்போ அவனையே உன்னை பார்த்துக்க சொல்லு நான் எதுக்காக உனக்கு சம்பாரிச்சு கொடுக்கனும் பணம் அனுப்பனும் இப்போ உன்னையும் உன் குழந்தையையும் பார்த்துக்கனும் ஒத்த பொண்ணுன்னு செல்வம் கொடுத்து வளர்த்தேன் பாரு என்னை சொல்லனும்” என்றார் அவர் “அம்மா நான் ஒன்னும் உங்களை என் கூட இருக்க சொல்லலை நீங்களா வந்திங்க நீங்க கிளம்புவிங்க இப்பவும் அதே மாதிரி கிளம்புங்க போய் உங்க பிஸ்னஸ்சை பாருங்க” எனக்கு என் குழந்தையை எப்படி வளர்க்கனும்ன்னு தெரியும் என்க அவளின் அவளையும் மன்மதனையும் முறைத்து பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் நிரஞ்சனாவின் தாய்.
அறையின் இருந்த பெட்டியில் துணியை எடுத்து வைத்து கொண்டு இருக்க அங்கு வந்த மன்மதன் “அவள் ஏதோ கோபத்துல பேசறா அத்தை நீங்க ஏன் கோவப்படுறிங்க” என்று அவன் கேட்க
“நீ பேசாத எங்கேயோ இருந்து வந்துட்டு என் பொண்ணை எங்க கிட்ட இருந்து பிரிச்சிட்டல்ல என்ன மாய மந்திரம் பண்ண அவளை மயக்க” என்று கத்த ‘இவங்களுக்கு எப்படி தெரியும் நான் மந்திரம் போட்டது’ என்று மன்மதன் மனதில் நினைக்க.
“மதன் அவங்க போனா போகட்டும் உன்னால என்னையும் பாப்பாவையும் பார்த்துக்க முடியாதா” என்று நிரஞ்சனா கேட்க அதெல்லாம் பார்த்துப்பேன் “ஆனா உங்க அம்மா அவங்க பாவம்ல்ல” என்று கூற “அவங்க இப்படி தான் நடிப்பாங்க நீ வா” என்று கூற நிரஞ்சனாவின் தாய் அவளை பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
“என் மேல உனக்கு அவ்வளவு பாசமா” என்று கேட்டுக் கொண்டே மன்மதன் நிரஞ்சனாவை அணைத்து கொள்ள நெருங்கி வர “தள்ளி போ” என்றாள் நிரஞ்சனா கோபத்துடனே மன்மதன் அதிர்ந்து நிற்க “அங்கேயே நில்லு இனி என் கிட்ட கூட வரக்கூடாது என்னை விட்டுட்டு போனல்ல அதுக்கு தண்டனை வேணாம் என்னை நெருங்கவே கூடாது நீ நாளையிலிருந்து நீ வேலைக்கு போய் ஏதாவது வேலையை தேடு” என்று கூறிவிட்டு அறையின் உள்ளே சென்று கதவை மூடிக் கொண்டாள்.
மன்மதன் அவள் பேச்சில் அசையாமல் அதிர்ந்து போய் நின்றிருந்தான் “வேலைக்கு போகனுமா எனக்கு எதுவுமே தெரியாதே” என்று நினைத்தவன் வெளியே சென்று வேலை தேட ஆரம்பித்தான் ஊரெங்கும் அலைந்தும் அவனுக்கு ஒரு வேலையும் கிடைத்த பாடில்லை மனைவியையும் மகளையும் எப்படி கப்பாற்ற போகிறோம் என்று நினைத்தவன் பூலோகத்தில் பணம் சம்பாரிப்பது இவ்வளவு கடினமான காரியமா என்று நினைத்து கொண்டு இருந்தவன் எதார்த்தமாக திரும்ப அங்கிருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில் செக்யூரிட்டி வேலைக்கு ஆட்கள் தேவை என்று இருந்தது அதை படித்தவுடன் முகம் மலர உள்ளே சென்றான்.
அங்கிருந்த முதலாளியிடம் தயங்கி தயங்கி “சார் வேலை வேணும்” என்று கேட்க அவனை ஏற இறங்க பார்த்த அவர் “செக்யூரிட்டி வேலை தான் இருக்கு மாசம் 10,000 சம்பளம்” என்று கூற “எனக்கு எதுவா இருந்தாலும் சரி தான் சார்” என்று கூற
அவனின் விவரங்கள் அனைத்தையும் நாளையிலிருந்து வேலைக்கு வருமாறு அனுப்பி வைத்தார்.
இரவு அவன் ஓய்ந்து வீடு வந்து சேர அவன் மனைவியும் மகளும் உறங்கி கொண்டு இருந்தனர் அவனும் கதவடைத்துவிட்டு வந்து அறையின் படுக்கையில் வந்து நிம்மதியாக வந்து படுத்தான் நடுவில் மகள் அந்த பக்கம் மனைவி என்று அத்தனை இனிமையாக இருந்தது அந்த நேரம் அவன் மனதில் இருந்த கவலைகள் மறந்தன தான் யார் என்பதையும் மறந்து ஒரு மானுடனாகவே வாழ ஆரம்பித்தான் இன்று முழுவதும் சுற்றி திரிந்த களைப்பில் நிம்மதியாக உறங்கினான்.