மன்மத லீலை 7

அத்தியாயம் 7

 

நிரஞ்சனா அவனை அதிர்வுடனே பார்க்க அவளின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஒரு அறைவிட்டான் மன்மதன் “நிரஞ்சனா என்ன இது பைத்தியக்கார தனம் நீ இந்த மன்மதனின் மனைவி ஒரு அர்ப மானுடனை போல இப்படி ஒரு காரியத்தை செய்யலாமா” என்று அவன் கேட்க முடியும் அழுத விழிகளுடனே நிரஞ்சனா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். 

 

“நான் உங்க மனைவின்னு உங்களுக்கு இப்போ தான் தெரியுதா நான் உங்களை தேடி தேடி வரும் போது தெரியலையா ஒரு நாய்க்குட்டி மாதிரி உங்க பின்னாடி காதலுக்காக அலையும் போது தெரியலையா எனக்கு மட்டும் தான் உங்க மேல காதல் இருக்கு ஆனா உங்களுக்கு என் மேல துளி அளவு கூட அன்பு இல்லை” என்று அவள் கண்ணீருடனே கூற அவனின் மனம் வலித்தது குற்ற உணர்ச்சி அவனை கொல்லாமல் கொன்றது. 

 

“நிரஞ்சனா நான் உன்னை திருமணம் செய்து இருந்தாலும் என்னால் உன் மீதான காதலையோ தாபத்தையோ வெளிப்படையாக காட்ட முடியாத நிலையில் இருக்கிறேன் இன்னும் வெறும் பத்து-இருபது நாட்கள் மட்டும் தான் நான் இங்கு இருப்பேன் அதன் பின் நாம் இருவரும் வானுலகம் சென்று விடுவோம் அங்கு சென்ற பின் உன் மீதான காதலையும் தாபத்தையும் ஒட்டு மொத்தமாக கொண்டாடி தீர்த்து விடுவேன் என்றான் அவளின் கண்ணீரை துடைத்து “நான் உங்க கூட வந்துட்டா என் அப்பா அம்மாவை நான் எப்படி பார்ப்பேன்” என்று கேட்டாள் பெண்ணவள். 

 

“உன் தாய் தந்தை தான் உன்னுடன் இருப்பதே இல்லையே அன்பே பின் எதற்க்கு இந்த கவலை” என்றான் அவளின் தோளில் கைப்போட்டு எப்படியோ அன்றைய பொழுது அவளை சமாதானம் செய்தான். 

 

மறுநாள் காலை மன்மதன் நிரஞ்சனாவுடன் சமையலறையில் ஒத்தாசையாக ஏதோ வேலை செய்து கொண்டு இருக்க வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கப்பட்டது மன்மதன் சென்று கதவை திறக்க அங்கே நின்றிருந்த ஆடவனை சந்தேகமாக பார்க்க அந்த ஆடவனோ இவனை யார் என்பதை போல பார்த்தான் “நிரஞ்சனா இல்லை நீ யாரு” என்று கேட்க “நான் நான்” என்று அவன் ஏதோ கூற வருவதற்க்குள் நிரஞ்சனா அங்கு வந்தாள் அங்கே நின்றிருந்தவனை அதிர்வுடனே பார்த்தாள் அவனோ மன்மதனை தள்ளி விட்டு அவள் அருகில் வந்தவன் அவளை மன்மதன் முன்னேயே இறுக அணைத்து கொண்டான். 

 

மன்மதன் அவனை கண்ணாலே எரிக்க நிரஞ்சனா அவனிடமிருந்து விலகி சங்கடத்துடேன நின்றாள் “நீங்க…நீங்க… எப்போ வந்திங்க ராஜ்” என்று கேட்க 

“இப்போ தான் உன் அப்பா அம்மா பேசுனாங்க இன்னும் ஒரு வாரத்துல வரப்போறாங்க தெரியுமா பிளைட் இப்போ கொஞ்சம் விட்ருக்காங்க டிக்கெட் புக் பண்ணிட்டாங்களாம்” என்று கூற நிரஞ்சனாவுக்கு இன்னும் பேரதிர்ச்சி அது அவளுக்கு மட்டுமல்ல மன்மதனுக்கும் தான் பேரதிர்ச்சி “ஆமாம் இது யாரு” என்று அவன் மன்மதனை கைக் காட்டி நிரஞ்சனாவிடம் கேட்க. 

 

“இவரு…இவரு… என் பிரண்ட்” என்றாள் நிரஞ்சனா தட்டுத்தடுமாறி அவளின் பதிலில் மன்மதனுக்கு கோபம் தலைக்கு ஏறியது கண்ணாலேயே அவளை எரிப்பதை போல பார்த்தான் “ஹாய் நான் ராஜ் உங்க தோழி நிரஞ்சனாவை கல்யாணம் பண்ணிக்க போறவன்” என்று கூறி அவன் முன் கையை நீட்ட அவனை கொன்று விடலாமா என்று தோன்றியது என்ன தான் மன்மதனுக்கு வானுலகில் இருந்து வந்திருந்தாலும் தன் மனைவியை இன்னொருவன் திருமணம் செய்ய பேகிறேன் என்று கூறினால் எந்த கணவனால் தான் பொறுத்து கொள்ள முடியும். 

 

அவன் தன் கோபத்தை வெளிக்காட்டுவது என்று தெரியாமல் அறையின் உள்ளே சென்று கதவடைத்து கொண்டான் ராஜ் இன்னும் கையை நீட்டி கொண்டே நிற்க 

அவனுக்கு கோபம் வந்தது “யாரு இவன் சரியான திமிரு பிடிச்சவனா இருக்கான்” என்று கேட்க நிரஞ்சனா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் அவளின் கண்கள் அறையையே பார்த்து கொண்டு இருந்தது. 

 

இரவு சாப்பிட கூட மன்மதன் அறையை விட்டு வெளியே வரவேயில்லை அவன் கோபத்தை எதில் காட்டுவது என்று தெரியாமல் தன் கையை மடக்கி சுவற்றில் இடித்து குத்தி கொண்டே அவன் கையில் இருந்து ரத்தம் கசிந்தது அதை கூட கண்டு கொள்ளாமல் அப்படியே வலியுடன் அமர்ந்திருந்தான் ராஜ் சென்று உறங்கி விட நள்ளிரவு வேளையில் நிரஞ்சனா சாப்பாடு தட்டுடன் மன்மதன் அறையின் கதவை தட்ட 

அவனோ கதவை திறக்கவேயில்லை மீண்டும் மீண்டும் கதவு தட்டப்பட எழுந்து சென்று கதவை திறந்தான். 

 

அறை கதவை திறந்தவுடன் நிரஞ்சனா உள்ளே வந்தவள் மன்மதன் கையில் இருந்த ரத்தத்தை பார்த்து பதறிவிட்டாள் 

“மதன் என்ன இது உங்க கையில காயம்” என்று பதட்டத்துடனே பேசியவள் ஓடிச்சென்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்தாள். 

 

அவன் கையில் ரத்த கட்டி வீங்கி இருந்த இடத்தில் மருந்தை வைக்க அவனின் கையுடன் சேர்த்து அவனின் உள்ளம் வலித்தது “ஏன் இந்த மாதிரியெல்லாம் பண்றிங்க மதன்” என்று அவள் கேட்டு கொண்டே மருந்தை வைத்து முடித்து அவனுக்கு உணவை ஊட்டி விட ஆரம்பித்தாள் அவனின் கண்கள் அவளையே பார்த்து கொண்டே இருந்தது. 

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருக்க அந்த பக்கமாக தண்ணீர் குடிப்பதற்க்காக ராஜ் வந்தான் அறையின் கதவு திறந்து இருக்க நிரஞ்சனா மன்மதனுக்கு சாப்பாடு ஊட்டி விடுவதை பார்த்து அதிர்ந்தேவிட்டான் “நிரஞ்சனா இங்க என்ன நடக்குது” என்று கோபத்துடனே கேட்க நிரஞ்சனா பயத்துடனே எழுந்து நிற்க மன்மதன் அசாராமல் அவனை முறைத்து பார்த்து கொண்டே அமர்ந்திருந்தான். 

 

ராஜ் கோபத்துடனே அறையின் உள்ளே வந்தவன் “நிரஞ்சனா இங்க என்ன நடக்குது நீ எதுக்கு அவனுக்கு சாப்பாடு ஊட்டிட்டு இருக்க அவனுக்கு கையில்லை” என்று அவன் கேட்க “இல்லை ராஜ் அவருக்கு கையில அடிப்பட்டு இருக்கு” என்று கூற அவன் கண்கள் மன்மதனின் கையை பார்த்தது “அதுக்காக ஒரு ஸ்பூன் எடுத்து வந்து கொடுக்க வேண்டியது தான நீ எதுக்காக அவனுக்கு ஊட்டுற” என்று கேட்க “அவரால முடியலை அதுக்காக உதவி பண்றேன்” என்றாள் நிரஞ்சனா கோபத்துடனே அதற்க்கு மேல் ராஜ் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினான். 

 

மன்மதன் அவளை பார்த்து முறைத்தவன் “நீ அவனிடம் சொல்ல வேண்டியது தானே நான் உன் கணவன்” என்று அவன் கேட்க

“நீங்க என்ன என் கழுத்துல தாலி கட்டுனுங்களா இல்லை புருசனவோ காதலனாவோ என்னைக்காவது நடந்து இருக்கிங்களா நீங்க என்னை காதலிக்கிறிங்களான்னு எனக்கே தெரியாத போது நான் எப்படி சொல்ல முடியும் அவன் கிட்ட” என்று கேட்க மன்மதனிடம் அதற்க்கான பதில் இல்லை 

அவன் தான் அவளை தன் காதலி மனைவி என்று வெளியே சொல்ல முடியாத நிலையில் இருக்கிறானே. 

 

அவன் என்ன சொல்வான் பதிலே இல்லை அவனிடம் நிரஞ்சனா அவனை முறைத்துவிட்டு அறையில் இருந்து வெளியேறினாள் மன்மதன் நிலையோ மோசமாக இருந்தது ‘என்னை இந்த நிலைக்கு தள்ளிவிட்டாயே முனிவா’ என்று மனதிலேயே புலம்பினான் இன்னும் குறை காலத்தை எப்படி இந்த பூலோகத்தில் ஓட்டப் போகிறானோ.

 

நாட்களும் நகர்ந்தது நிரஞ்சனாவின் தாய் தந்தையும் அடுத்த விமானத்தில் அங்கு வந்து சேர்ந்தனர் நிரஞ்சனாவுக்கும் 

ராஜ்க்கும் நிச்சயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது கொரானா கால கட்டம் என்பதால் வெறும் பத்து பதினைந்து பேர் மட்டும் அழைக்கப்பட்டு சிறிதாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. 

 

அங்கு வந்திருந்த அனைவரின் கேள்வியும் மன்மதன் யார் என்பது தான் பதில் சொல்ல முடியாமல் திணறனாள் நிரஞ்சனா நிச்சயதார்த்தம் நடைபெற நிரஞ்சனா கையில் ராஜ் மோதிரம் மாட்ட மன்மதனுக்கு வந்ததே அவன் கோபத்தில் அந்த இடம் அதிர நிலநடுக்கம் வந்தது அனைவரும் பயந்து அலற அவன் ஒரு வன் மட்டும் சிரித்து கொண்டே நின்றிருந்தான். 

 

நிலநடுக்கத்தில் அனைவரும் அலறி அடித்து கொண்டே ஓட நிரஞ்சனாவின் தாய் தரையில் விழுந்து அவரின் தலையில் அடிப்பட்டுவிட்டது நிரஞ்சனா “அம்மா” என்று கத்திக் கொண்டே ஓடினாள் 

அவர் மயங்கி ரத்தத்துடனே கிடக்க மருத்துவமனையில் அனுமதித்தனர் சாதாரண காயம் என்பதால் அன்றே டிஸ்சார்ஜ் செய்தனர் அன்று இரவே அவளின் பெற்றோர் பிஸ்னஸ் விஷயமாக துபாய் சென்று விட ராஜ் அவன் வீட்டுக்கு சென்றிருந்தான். 

 

நிரஞ்சனாவின் பெற்றோர் அவளை அழைத்தும் அவள் வரமறுத்துவிட்டாள் பரீட்சை இருக்கிறது என்ற சாமாளித்துவிட 

அவர்களும் சென்று விட்டனர் இரவு வேளை நிரஞ்சனா வீட்டுக்கு கோபத்துடனே வீட்டுக்கு அவளுக்கு அந்த நிலநடுக்கம் மன்மதன் வேலை தான் என்று கோபத்துடனே உள்ளே வந்தவள் தன் பையை தூக்கி எறிந்தாள் “மதன் மதன்” என்று கத்திக் கொண்டே உள்ளே வர அவனும் கோபத்துடனே சோபாவில் அமர்ந்திருந்தான் அவன் கழுத்தில் எப்போதும் அணிந்திருக்கும் மாலை இல்லை அதை கழட்டி வைத்திருந்தான். 

 

“மதன் நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கிங்க உங்க மனசுல எவ்வளவு தைரியம் இருந்தா என் அம்மாவையே கீழ இடச்சு தள்ளுவிங்க” என்று கேட்க 

“நான் உன் தாயயை இடித்து தள்ளவில்லை அவர் தான் நிலை தடுமாறி கீழே விழுந்தார்” என்றான் அவனும் எழுந்து நின்று “எதுக்காக இப்படி பண்ணுனிங்க” என்று அவள் கேட்க “என் மனைவி நீ இன்னொருவனுடன் ஜோடியாக நிற்பதை என்னால் எப்படி தாங்கி கொள்ள முடியும்” என்றான் கோபத்துடனே. 

 

“நீங்க தான் என்னை காதலிக்கவே இல்லையே நான் யார் கூட ஜோடியா நின்னா உங்களுக்கு என்ன கஷ்டம்” என்று கேட்க “யார் சொன்னது எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்று எனக்கு உன்னை பிடித்ததால் தான் ஒரு நிமிடம் கூட யோசியாமல் நீ உயிருக்கு போராடும் போது எதைப் பற்றியும் யோசியாமல் உன் உயிரை காப்பாற்ற என் மனைவியாக உன்னை ஏற்றுக் கொண்டேன் காதலே இல்லாமல் எந்த ஆணால் ஒரு பெண்ணை மணக்க முடியும்” என்று கேட்டான் மன்மதன் அவனை அதிர்வுடனே அவள் பார்க்க. 

 

“நிரஞ்சனா நான் உன்னை உண்மையாக நேசிக்கிறேன் உன்னை மட்டுமே நேசிக்கிறேன் உன் மொழியில் சொல்ல வேண்டுமானால் உண்மையிலேயே காதலிக்கிறேன்” என்று கூறிக் கொண்டே அவளை இறுக அணைத்து கொண்டான் 

நிரஞ்சனாவும் அவனை இறுக அணைத்து கொண்டாள். 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *