மன்மதன் லீலை 4
அத்தியாயம் 4
மறுநாளில் இருந்து ஊரடங்கு அமலுக்கு வந்தது வெளியே சத்தம் ஏதும் இன்றி ஊரே அத்தனை அமைதிமாக இருந்தது வீதிகள், நிரஞ்சனா காலை உணவுக்கு ஒரு பிரட் டோஸ்ட் செய்து எடுத்து வந்தாள் இருவரும் சாப்பிட “எத்தனை அமைதியாக இருக்கிறது பெண்ணே இந்த பூலோகம் வாகனங்களின் சத்தம் இல்லாமல் இந்த மானுடர்கள் எப்போதும் எங்காவது சென்று கொண்டே தான் இருக்கிறார்கள்” என்றான் மன்மதன்.
“மதன் அவங்க எல்லாருக்கும் வேலை இருக்கும்ல்ல அதை பார்க்க தான் போவாங்க” என்றாள் நிரஞ்சனா சாப்பிட்டு கொண்டே மன்மதன் தலையை ஆட்டிக் கொண்டே சாப்பிட்டு கொண்டிருக்க
“ஆமாம் நீங்க யாரு எங்க இருந்து வர்றிங்கன்னு இப்போ வர என் கிட்ட சொல்லவேயில்லையே” என்று நிரஞ்சனா அவனிடம் கேட்க “அதுவா நான் வானுலகத்தில் இருந்து பயணித்து பூலோகம் வந்திருக்கிறேன் எல்லாம் அந்த முனிவனின் சாபம் நான் தான் காதலின் கடவுள் மன்மதன்” என்று கூற நிரஞ்சனா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.
“நீங்க கடவுள்ன்னா அப்போ நான் என்ன பேய் யா” என்று கேட்டுக் கொண்டே அவள் மீண்டும் சிரித்தவள் “சொல்ல விருப்பம் இல்லைன்னா விடுங்க எதுக்காக பொய் சொல்றிங்க உங்களுக்கு தோனும் போது சொல்லுங்க” என்று கூறிவிட்டு தட்டை எடுத்து கொண்டு உள்ளே செல்ல ‘இவள் என்ன நான் உண்மையை சொன்னால் கூட நம்ப மறுக்கிறாள்’ என்று மனதில் நினைத்தான் மன்மதன்.
நாட்களும் நகர்ந்தது இன்றோடு மன்தன் பூலோகம் வந்து இரண்டு நாட்கள் முடிந்திருந்தது மன்மதன் அங்கிருந்து சுவற்றில் கரிகட்டையால் 45 நாட்களில் இரண்டு நாட்களை அடித்தவன் ‘அப்பா டா ஒரு வழியாக இன்னும் 43 நாட்கள் மட்டும் எஞ்சி இருக்கிறது இதை மட்டும் கடந்துவிட்டாள் நான் தான் வீரன்’ என்று தனக்கு தானே கூறிக்கொண்டு உள்ளே வர உன்னை நிம்மதியாக இருக்க நான் விட்டு விடுவேனா என்று நினைத்த மகாமுனிவர் இனி நடக்கும் சம்பவங்களை நினைத்து சிரித்து கொண்டு இருந்தார்.
அன்று இரவு நிரஞ்சனாவின் கல்லூரி நண்பர்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு பார்ட்டிக்காக அவள் வீட்டுக்கு வந்திருந்தனர் அன்று நிரஞ்சனாவின் பிறந்தநாள் என்பதால் அவளை மகிழ்விக்க சர்ப்ரைஸ்சாக வந்திருக்க வீட்டின் கதவு தட்டப்பட மன்மதன் தான் சென்று கதவை திறந்தான் அவனை இடித்து தள்ளிவிட்டு அவளின் நண்பர்கள் கையில் கேக் சரக்கு சைட் டிஸ்சுடனே வர
“யாராடா நீங்கள் எல்லாம் திறந்த வீட்டில் ஏதோ நுழைவதை போல வருகிறிர்கள் அதுவும் அரைகுறை ஆடையுடன் உங்கள் உலகில் எல்லாம் ஊரடங்கு போடவில்லையா” என்று மன்மதன் கேட்டு கொண்டு இருக்க அவனை யாரும் மதிக்கவேயில்லை.
நேரே நிரஞ்சனா அறைக்கு சென்றவர்கள்
“ஹைப்பி பர்த் டே” என்று சத்தமாக கத்த உறங்கி கொண்டு இருந்தவள் அடித்து பிடித்து கொண்டு எழுந்தமர்ந்தாள் தன் எதிரே நின்றிருந்த நண்பர்களை பார்த்து ஆச்சரியத்துடன் அமர்ந்திருக்க கேக் வெட்டி பார்ட்டி ஆரம்பமானது நிரஞ்சனா பிறந்தநாள் உடை அணிந்து வெளியே வர அவளை பார்த்த மன்மதன் ஆடிவிட்டான்.
வெள்ளை நிற குட்டி கையில்லா கவுன் ஒன்றை அணிந்து இருந்தாள் அது அவளின் தொடை அளவு மட்டுமே இருக்க இறுக்கி பிடித்த ஆடையில் அவளின் அங்க வளைவுகள் அப்படமாக தெரிய அவன் ஆவென்று பார்க்க அவனின் கழுத்தில் இருந்த மாலையில் இருந்து மின்சாரம் தாக்கியது அவன் அருகில் நிரஞ்சனா
“இது நீ சிறுபிள்ளையாக இருக்கும் போது எடுத்த உடையா பெண்ணே” என்று கேட்க
அவளோ அவனை முறைத்து பார்த்தாள்.
நட்ட நடு வீட்டில் வித விதமான வெளிநாட்டு சரக்குகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்க நிரஞ்சனா ஒற்றை கண்ணாடி கிள்ஸ்சை கையில் எடுத்து குடிக்க ஆரம்பித்தாள் அங்கிருந்த அனைவரும் “ஊஊஊ” என்று கத்த மன்மதனுக்கு அங்கு நடக்கும் அனைத்தும் வித்தியாசமாக தெரிந்தது ‘என்ன டா இது நரியை போல ஊலையிடுகிறார்கள்’ என்று நினைத்தான் பெண்ணவளோ வரிசையாக நான்கைந்து கிளாஸ்சை உள்ளே இறக்கியவள் அடுத்த படியாக போதையில் நிற்க முடியாமல் சோபாவில் அமர்ந்திருந்த மன்மதன் மடியில் வந்து அமர்ந்து கொண்டாள்.
மன்மதன் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டான் அவனின் கழுத்தில் இருந்த மாலையில் பல முறை மின்சாரம் தாக்கியது அவன் மனம் சபலமடைய ஆரம்பிக்க அவளின் இடையில் கைக்கொடுத்து தூக்கி கீழே அமர வைத்தவன் தன் உடலின் வெப்பத்தை குறைத்து தன்னை கட்டுக்குள் கொண்டு வர குளிக்க சென்றான்.
அவனையே பார்த்த நிரஞ்சனாவின் தோழி தன் சக தோழியிடம் நிர்மலா “யார் டி இவன் பார்க்க வித்தியாசமா இருக்கான் ஹேன்ட்ஸ்சமா வேற இருக்கான் ஆனா கழுத்துல சம்மந்தமே இல்லாம சாமியார் மாதிரி மணி எல்லாம் போட்ருக்கான்” என்று ஏக்கத்துடனே அவனை பார்த்து கேட்க
“யாரோ நிரஞ்சனாவை காப்பகத்தின் சாமியாரம் அவளுக்காக இங்க தங்கி இருக்கானாம்” என்று கூற “சாமியாரா அப்போ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டானா” என்று அவள் கேட்க “எதுக்கும் சரிப்பட்டு வர மாட்டான்” என்றாள் அவளின் தோழி கேட்ட “எல்லாத்துக்கும் தான்” என்று கூறிவிட்டு அவள் கண்டிக்க
“டிரை பண்ணி பாரு” என்றாள் அவளின் தோழி.
நிரஞ்சனா சோபாவில் மட்டையாகி கிடக்க
அவளின் தோழி அறையின் உள்ளே வந்தாள் மன்மதன் தலையில் தண்ணீரை ஊற்றிவிட்டு ஒரு டிஷர்ட்டை மாட்டி கொண்டு வெளியே வர நிரஞ்சனா தோழி உள்ளே வந்தாள் மன்மதன் அருகில் நெருங்கி “ஹேய் பையா நீ ரொம்ப ஹேன்ட்ஸ்சமா இருக்க” என்று கூறிக் கொண்டே அவன் டி ஷர்ட்டை பிடிக்க “அட பெண்ணே நீ யார் எதற்க்காக என்னை நெருங்கி வருகிறாய் தள்ளி போ” என்று அவன் அவளை பிடித்து தள்ளி விட அவன் பலத்துக்கு அவள் கதவை உடைத்து கொண்டு பறந்து வெளியே வந்து விழுந்தாள்.
அதுவரை பார்ட்டியில் பாட்டு போட்டு நடனமாடிக் கொண்டு இருந்தவர்கள் அவளை அதிர்வுடனே பார்க்க சத்தம் கேட்டு நிரஞ்சனாவும் எழுந்து பார்த்தாள்
அவளின் தோழி ரத்தம் வழிய தரையில் விழுந்து கிடந்தாள் மன்மதன் உடைந்த கதவின் வழியே வெளியே வர அவனை அதிர்வுடனே அனைவரும் பார்த்தனர்.
அவர்களின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் பயந்த மன்மதன் “நான் எதுவும் செய்யவில்லை இந்த பெண் தான் வந்து என்னை தொல்லை செய்தாள்” என்று கூற நிரஞ்சனாவின் தோழர்களுக்கு உடனே கோபம் வர “அதுக்காக எங்க ப்ரண்ட்டையே நீ அடிப்பியா டா” என்று கேட்டுக் கொண்டே மன்மதனை அடிக்க ஒருவன் கையை ஓங்கி கொண்டு வர அவன் கையை பிடித்து இடித்து தான் தள்ளினான் அவன் பறந்து சென்று விழ
மன்மதனின் கோபத்தில் அவன் கண்கள் சிவந்த அந்த வீடே அதிர வேகமாக காற்று வீசியது பொருட்கள் எல்லாம் பறந்து கீழே விழுந்தன “டேய் இவன் மனுசன் தானா என்ன என்னவோ நடக்குது” என்று நிரஞ்சனா நண்பர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள “இல்லை எதாவது ரத்தக் காட்டேரி மாதிரி” என்று இன்னொருவன் கூற அவ்வளவு தான் நிரஞ்சனாவை விட்டுவிட்டு அனைவரும் அங்கிருந்த அலறி அடித்து கொண்டு ஓட ஆரம்பித்தனர்.
நிரஞ்சனாவோ சொல்லவே தேவையில்லை அவனை பார்த்து பயந்து நடுங்க ஆரம்பித்தாள் மன்மதன் அவள் அருகில் ஏதோ பேச வர “என் கிட்ட வராத எனக்கு பயமா இருக்கு” என்று பயத்தில் கத்தி அலறி அடித்து கொண்டு அங்கிருந்து தன் அறையின் உள்ளே ஓடிச் சென்று கதவடைத்து கொண்டாள் இரவு முழுக்க அவள் வெளியே வரவில்லை வெளியே பயங்கர சத்தமாக இருந்தது மன்மதன் தான் உடைந்த கதவை சரி செய்து கொண்டு இருந்தான் உண்மையிலேயே அவன் மனிதன் இல்லையா என்ற பயம் அவளுக்கு தன் போனில் அடுத்து துபாய்க்கு டிக்கெட் எப்போது இருக்கிறது என்று பார்க்க விமான சேவை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
நிரஞ்சனா அறையை விட்டு வெளியே வரவேயில்லை பயத்துடனே இரவெல்லாம் தூங்காமல் அமர்ந்து இருந்தாள் மன்மதன் பலமுறை கதவை தட்டியும் அவள் திறக்கவேயில்லை காலை பொழுது விடிய அவளின் தாய் தந்தை அவளுக்கு போனில் அழைத்திருக்க அலைப்பேசியை உயர்ப்பித்து காதில் வைத்தவளுக்கு பயத்தில் அழுகை தான் வந்தது கண்கள் கலங்க பொங்கி வரும் அழுகையை அடக்கியவள் “சொல்லுங்க மா” என்று கண்ணீரை துடைத்து கொண்டு பேச.
“தங்கம் ஹாப்பி பர்த் டே” என்க “ம்ம்” என்றாள் பதிலுக்கு “வீடியோ கால் பண்றேன்” என்று கூற “அம்மா வேண்டாம் நான் வேலையா இருக்கேன்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
காலை பாத்ரூம் செல்லவாவது வெளியே சென்று தானே ஆக வேண்டும் பயத்துடனே வெளியே நேற்று உடைந்த கதவு சரி செய்யப்பட்டு வீடே சுத்தமாக இருந்தது நேற்று இரவு பார்ட்டி நடந்ததற்க்கான தடயமே சுத்தமாக இல்லை மன்மதன் அவளை பார்த்தவன் “என்னை மன்னித்துவிடு பெண்ணே உன் தோழியை அடித்தது என் தவறு தான்” என்று கூறியவன் அவள் கையில் அந்த வீட்டின் சாவியை கொடுத்துவிட்டு கிளம்பினான்.
நிரஞ்சனா அவனை இருக்க சொல்லி கேட்க்கவேயில்லை அவள் சென்று உடை மாற்றி வந்து தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருக்க ஒரு மணி நேரம் கழித்து அவள் வீட்டின் காலிங் பெல் அடித்தது
யார் என்று யோசனையுடனே அவள் சென்று கதவை திறக்க இரண்டு காவலர்கள் நின்றிருந்தனர் அவர்களுடன்
மன்மதனும் நின்றிருந்தான்.
“என் மா இவனை உனக்கு தெரியுமா” என்று மன்மதனை கைக் காட்டி கேட்க “தெரியும் சார்” என்றாள் அவள் பதிலுக்கு “ஊரடங்கு நடக்குது யாரும் வெளியே வரக்கூடாதுன்னு தெரியாதா இவன் பேசாம மாஸ்க் கூட இல்லாம ஊரை சுத்திட்டு இருக்கான் ஒழுங்கா வீட்ல உட்கார வைங்க இன்னொரு தடவை இந்த ஆளை வெளியே பார்த்தோம் கொரோனா கேஸ்ல உள்ளே போட்ருவோம்” என்றார்.
அந்த காவலர்கள் அங்கிருந்து செல்ல வேறு வழியே இன்றி நிரஞ்சனா “வாங்க உள்ள” என்றாள் அவனும் அவள் பின்னே அமைதியாக வந்தான் நிரஞ்சனாவுக்கு அவன் தன்னை காப்பாற்றியது நினைவுக்கு வர எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் இருவரும் எதுவும் பேசாமல் இருக்க வீடே அமைதியாக இருந்தது.