மன்மதன் லீலை

மன்மத லீலை

 

அத்தியாயம் 1

 

வானுலகம் முனிவர்களுக்கு எல்லாம் மூத்த முனியவர் வயதில் முதிர்ந்தவர் 200 வயதுடைய நாத முனிவர் வானுலக பணிகள் அனைத்தும் சிறப்பாக நடக்கிறதா என்று பார்க்க வந்தார் அவர் வலம் வருவதை அறியாமல் இருந்த தேவ தூதர்கள் அனைவரும் ஒவ்வொரு பெண்களுடன் கூத்தடித்து கொண்டும் கொஞ்சி குலாவி கொண்டும் இருந்தனர் 

அவர் வந்து நிற்பதை கூட அறியாது மதி மயங்கி கிடக்க அவரின் முகம் கோபத்தில் சிவந்தது இதற்கெல்லாம் காரணம் யார் என்று அவருக்கு நிச்சயமாக தெரியும் 

‘இவை அனைத்துக்கும் காரணம் அந்த பாழாய் போன மன்மதன் தான்’ மனதில் நினைத்தவர். 

 

மன்மதன் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து சென்றார் அவனோ அந்தப்புரத்தில் பளபளவென்று இருந்த மெத்தை மேல் படுத்திருக்க அவனை சுற்றி நான்கு பெண்கள் இருந்தனர் அதில் ஒருத்தி அவன் வாயில் திராட்சை பழத்தை ஊட்ட நாவால் மென்று விழுங்கி கொண்டு இருக்க அதை பார்த்தவருக்கு இன்னும் கோபம் அதிகமானது அவனுடன் இருந்த பெண்களில் ஒருத்தி நாதமுனிவரை பார்த்து அடித்து பிடித்து கொண்டு எழுந்து கொள்ள மற்ற பெண்களும் அவரை பார்த்து எழுந்து நின்றனர். 

 

மன்மதன் சோமபானம் அருந்தியிருக்க போதையில் இருந்தவனுக்கு தன் முன்னே யார் நிற்கிறார் என்று கூட தெரியவில்லை எழுந்து நிற்காமல் படுக்கையில் படுத்து கொண்டே அவரை நிமிர்ந்து பார்த்தவனுக்கு அவரும் ஏதோ ஒரு அழகான பெண்ணை போல தோன்ற “பெண்ணே வா அருகில் வா” என்று மையலுடன் அவரை பார்த்து அழைத்தவன் அதோடு நிற்காமல் அவரின் அருகில் எழுந்து சென்று அவரின் இடையோடு கைக் கொடுத்து தன்னோடு சேர்த்தணைக்க 

அவருக்கு வந்ததே கோபம் ஏதோ ஒரு மந்திரத்தை சொல்ல அவனின் மயக்கம் தெளிந்து சுயநினைவுக்கு வந்தவன் 

“மகாமுனிவரே நீர் எப்போது இங்கு வந்திர்” என்று கேட்க அவருக்கு கோபம் தலைக்கு ஏறியது. 

 

“உனக்கு எவ்வளவு துணிவு இருந்தால் போதை மயக்கத்தில் என்னையே பெண் என்று நினைத்து உன்னோடு சேர்த்தணைப்பாய்” என்று கேட்க 

“அய்யய்யோ மகாமுனிவரே நானா அப்படி செய்தேன்” என்று அவன் கேட்க

“போதும் நிறுத்து மன்மதா உன்னால் இந்த வானுலகமே சீர் கேட்டு கிடைக்கிறது இங்கிருக்கும் அனைவரும் தங்கள் வேலையை செய்யாமல் காதல் மயக்கத்தில் பித்து பிடித்து அலைகின்றனர்” என்றார். 

 

“அய்யோ மகாமுனிவரே நான் என் பணியை தான் செய்தான்” என்று மன்மதன் பேச வர “ம்ம்” என்று அவன் பேச வரும் முன்னே கையை நீட்டி தடுத்தவர் 

“நீ எந்த விளக்கமும் எனக்கு தர வேண்டாம் நீ செய்த தவறுக்கு தண்டனை வழங்க வேண்டாமா அடுத்து வரும் 45 நாட்களுக்கு நீ பூலோகம் செல்ல புனித மாலை அணிந்து ஒரு சாதாரண மனிதனாக வாழ வேண்டும் அடுத்து வரும் நாட்களுக்கு உன் வாழ்க்கையில் காதலும் காமமும் இருக்கவே கூடாது ஒரு முனிவனின் வாழ்வை வாழ வேண்டும் அதை மீறினால் 

உன் சக்திகள் அனைத்தையும் இழந்து சாதாரண மனிதனாக மாறி விடுவாய்” என்று கூற “மகாமுனிவரே” என்று அவன் ஏதோ பேச வர “ம்ம்ம் மீறினால் இன்னும் நரகத்தை அனுபவிப்பாய்” என்று கூற. 

 

மன்மதன் வேறு வழியேயின்றி தலையை ஆட்ட “ம்ம்ம் இந்த நொடியே புறப்படு” என்று கூற மன்மதன் அடுத்த கணம் அவரின் கண்ணை விட்டு பூலோகம் வந்தடைந்தான். 

 

சிவன் ஒருநாள் தியானத்தில் இருந்தாராம் 

அப்போ உலகத்தை காப்பாத்த சிவன்-பார்வதி திருமணம் நடக்கனும்ன்னு தேவர்கள் நினைச்சாங்க அதுக்காக சிவனுக்கு காதல் உணர்ச்சி வரவழைக்க மன்மதனை அனுப்புனாங்க அவனும் மலர் அம்பை எடுத்து சிவன் மீது ஏவ அடுத்த நொடி சிவன் கோபத்துடனே தன் நெற்றி கண்ணை திறந்து உடனே மன்மதனை எரித்து சாம்பலாக்குறாரு அப்போ மன்மதன் மனைவி ரதிதேவி வந்து இறஞ்சி கேட்க மன்மதனை உடல் இல்லாமல் உயிரோட இருக்க அனுமதிக்கிறார் சிவன் “அனங்கன்” உடல் இல்லாதவன்னு மன்மதனுக்கு இன்னொரு பெயர் இருக்கு அதனால தான் காதல் என்பது காண முடியாத ஒன்னா இருக்கு ஆனால் மனிதர்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு அதற்க்கு சக்தி இருக்கு. 

 

மன்மதன் என்றால் காதலின் தேவன் அல்லது காமத்தின் தேவன் என்று அர்த்தம் காதல், ஆசை, ஈர்ப்பு அனைத்தையும் உருவாக்குற சக்தி அவரிடம் இருந்தது இளமை நிறைந்த அழகான இளைஞன் மலர் அம்புகள் தான் அவரின் ஆயுதம் அவரின் காமக் கணைகளுக்கு ஈரேழு உலகத்தில் உள்ள அனைவரும் கட்டுப்படுவார்கள். 

 

அப்படிப்பட்ட மன்மதனையே 45 நாட்கள் பூலோகத்துக்கு வந்து வாழ்ந்து காதலிக்கவோ அல்லது சபலமடையவோ கூடாது என்று மகா முனிவர் சாபம் கொடுக்க பூலோகத்துக்கு வந்து சேர்க்கிறான். 

 

வானில் இருந்து பறந்து வந்து இறங்கிய மன்மதன் சாலைகளில் அதி வேகத்தில் செல்லும் வாகனங்களை ஆச்சரியமாக பார்க்கிறான் அவன் கண்கள் மெல்ல நிழற்குடையின் கீழ் நின்றிருக்கும் அழகு பெண்களை பார்த்தது ‘எத்தனை அழகான யுவதிகள் நம் உலகத்தில் கூட இத்தனை அழகான பெண்கள் இல்லையே’ என்று மனதில் நினைக்க அவன் கழுத்தில் அணிந்திருந்த இருந்த மாலையில் இருந்து அவன் உடலுக்கு மின்சாரம் பாய மகாமுனிவரின் சாபம் நினைவுக்கு வந்து தொலைத்தது கண்ணை மூடி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான். 

 

அங்கே சாலையில் செல்பவர்கள் அனைவரும் மன்மதனையே பார்த்து கொண்டு செல்ல தூரத்தில் இருந்த ஒரு நாய் ஒன்று மன்மதனை பார்த்து குலைக்க 

“ஏய் ஜந்துவே உனக்கு என்ன வேண்டும் எதற்க்காக என்னை பார்த்தை குரைக்கிறாய்” என்று கேட்டு கொண்டு இருக்க அங்கே இருவர் ஒரு பெரிய கண்ணாடியை தூக்கி சென்றனர் அதை பார்த்த பின்பு தான் மன்மதனுக்கே புரிந்தது அந்த நாய் எதற்காக அவனை பார்த்து குரைத்தது என்று வானுலகில் இருந்து அப்படியே வந்து மேலாடை இன்றி தங்க ஆபரணங்களுடன் வெள்ளை வேட்டியில் தன் உருவத்தை பார்த்தவன் அடுத்த நொடி விரலால் ஒரு சொடக்கு போட்டு தன் சக்தியை பயன்படுத்தி தன் உருவத்தை மாற்ற முயல அவனின் சக்தி சுத்தமாக வேலை செய்யவில்லை. 

 

“அடப்பாவி முனிவா என் சக்தியையும் பறித்து கொண்டாயா” என்று புலம்பியவன் அங்கிருந்து நடந்து சென்றான் அவன் செல்லும் தம்பதிகள் இருவர் நடு ரோட்டில் சண்டையிட்டு கொண்டு இருக்க 

குறுக்கே வந்த மன்மதன் “உங்களுக்குள் என்ன பிரச்சனை” என்று கேட்க 

“யாருயா நீ கோமாளி மாதிரி இருக்க சர்க்கஸ்ல இருந்து தப்பிச்சு வந்துட்டியா” என்று அந்த கணவன் கேட்க “நான் தான் காதலின் கடவுள்” என்று கூற. 

 

“என்ன பாஷையா பேசுற நீ” என்று அந்த பெண்மணி கேட்டார் அடுத்த கணம் மன்மதன் தன் கண்ணை மூடி மந்திரத்தை சொல்ல அவர்கள் இருவரின் மீதும் காதல் அம்பு பாய்ந்து இருவரின் முகமும் மாறியது முகத்தில் புன்னகை வழிந்தது ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டனர் 

‘பரவாயில்லை இது வேலை செய்யுது’ என்று மனதில் நினைத்த மன்மதன் அங்கிருந்து நடந்து சென்றான். 

 

மன்மதன் நடந்து சென்று ஒரு பேருந்து நிழற்குடையின் இருக்கையில் அமர்ந்திருந்தான் ஒவ்வொருவராக வருவதும் போவதுமாக இருக்க ‘இந்த மானிடர்கள் எல்லாம் எங்கு தான் செல்கிறார்கள் மிகவும் பரபரப்புடனே இருக்கிறார்களே’ என்று நினைத்தவனுக்கு அவ்வளவு நகைகளை போட்டிருப்பது வியர்த்து வடிய ஆரம்பித்தது வெயிலின் தாக்கம் மன்மதனையும் விட்டு வைக்கவில்லை ‘சூரியனுக்கு பக்கத்து வீட்டில் தான் பூலோகம் இருக்கிறது போல இங்கு மனிதர்கள் எப்படி தான் வாழ்கிறார்களோ’ என்று நினைத்த மன்மதனுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது 

அங்கே பக்கத்தில் பெரிய துணிக்கடை ஒன்று இருக்க மக்கள் கூட்டம் அலை மோதியது அங்கே இருந்த தண்ணீர் கேனில் ஒவ்வொருவரும் தண்ணீர் குடிப்பதை பார்த்த மன்மதன் தானும் சென்று தண்ணீர் குடித்தான். 

 

அவன் கண்கள் துணிக்கடையின் உள்ளே செல்ல “ஓஹோ இங்கு நிறை உடைகள் இருக்கிறதே” என்று நினைத்தவன் உள்ளே சென்று ஆண்கள் பிரிவின் பக்கம் சென்று தனக்கு தேவையான உடைகைளை எடுத்து டிரையல் ரூமுக்கு சென்று உடை மாற்றி கொண்டான். 

 

அவன் அணிகலன்கள் அனைத்தையும் மந்திரம் போட்டு மறைய வைக்க அதுவும் மறைந்து போனது இப்போது மன்மதன் அனைவரையும் போல தோற்றமளிக்க 29 வயது வாலிபனை போல காட்சி அளித்தான் நல்ல உயரம் மாநிறம் வசீகரமான தோற்றம் டி ஷர்ட் ஜீன்ஸ் அணிந்து நடந்து வெளியே வர “சார் பில்” என்று ஒரு பெண்மணி அவன் கையில் பில்லை நீட்ட அதையும் வாங்கி கொண்டவன் ஏதோ முகம் துடைக்கும் காகிதம் என்று நினைத்து முகத்தை துடைத்து விட்டு அதை தூக்கி எறிந்தான். 

 

மன்மதன் வெளியே அவனை வெளியே இருந்த காவலர்கள் பிடித்து கொண்டனர்

“டிரஸ்சையா திருடிட்டு போற ஒழுங்கு மரியாதையா பணத்தை கொடுத்துட்டு கிளம்பு” என்க மன்மதன் அவர்களை பார்த்தவன் “பணமா எதற்க்கு எங்கள் மேலோகத்தில் எதற்க்கும் பணம் தேவையில்லையே” என்று கேட்க 

“என்ன டா இவன் பைத்தியம் மாதிரி பேசுறான்” என்று கேட்க “இவனை கட்டி வச்சு அடிச்சா சரியா போயிடும்” என்று அவனை அடிக்க வர அவர்கள் அனைவரையும் இடித்து தள்ளிவிட்டு ஓட ஆரம்பித்தான் மன்மதன் அவர்களும் துரத்தி கொண்டே யாருமற்ற ஒரு பாழடைந்த பங்களா உள்ளே ஓடிச் சென்று ஒளிந்து கொண்டான். 

 

அவனை தேடி ஓடி வந்தவர்கள் அவனை தேடி அலைந்து காணவில்லை என்றவுடன் அங்கிருந்து சென்றுவிட்டனர் இரவு வரை மன்மதன் அங்கேயே இருக்க வயிறு பசி எடுத்தது எதாவது சாப்பிட செல்லலாம் என்று வெளியே வர அங்கே யாருமற்ற இடத்தில் இருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது சத்தம் வந்த திசையை நோக்கி நடந்து செல்ல அங்கே ஒரு நால்வர் சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்து கொண்டு இருக்க மன்மதனுக்கு வந்ததே கோபம் 

அவர்கள் அனைவரையும் அடி வெளுக்க அனைவரையும் பயந்து ஓடிவிட்டனர். 

 

அந்த பெண்ணோ உடலில் இருந்த சிறு காயங்களுடன் எழுந்து நின்றவள் 

“ரொம்ப நன்றி சார்” என்றாள் 

“யாரம்மா நீ இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறாய்” என்று கேட்க

“நான் நிரஞ்சனாதேவி இங்க பக்கத்துல இருக்க காலேஜ்ல பைனல் இயர் படிக்கிறேன் பிரண்ட் வீட்டுக்கு பார்ட்டிக்கு வந்தேன் அங்கிருந்து கிளம்பும் போது இவங்க என்னை துரத்திட்டு வந்தாங்க” என்றாள் அழுது கொண்டே. 

 

அத்தியாயம் 2 

 

“சரி பெண்ணே இனி நீ எங்கும் தனியே வராதே இந்த பூலோகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை இங்கிருந்து முதலில் கிளம்பு” என்க அவளுக்கு அங்கிருந்து தனியாக செல்ல பயமாக இருந்தது அவள் தயங்கி நிற்க “சரி நானும் உன்னுடனே வருகிறேன்” என்று கூறிய மன்மதன் அவளுடன் நடந்து சென்றான். 

 

நிரஞ்சனா வெளியூரில் இருந்து இங்கு வந்து படிக்கிறாள் இந்த வருடம் தான் ஹாஸ்ட்டலில் சாப்பாடு சரியில்லை என்று வெளியே சிறிய வீடு ஒன்றை எடுத்து தங்கி இருந்தாள் இப்போது இப்படி ஒரு சம்பவம் நடக்க அவளுக்கு பயமாக இருந்தது. 

 

இருவரும் நடந்தே வீடு வந்து சேர 

கதவை திறந்த நிரஞ்சனா என்ன நினைத்தாளோ “வாங்க சாப்பிட்டு போலாம்” என்று மன்மதனை அழைக்க 

“வேண்டாம் பெண்ணே இருக்கட்டும்” என்று கூற “எனக்கு இவ்வளவு உதவி பண்ணியிருக்கிங்க சாப்பிட்டு போங்க பிளீஸ்” என்றாள் மன்மதனுக்கும் பசி வயிற்றை கிள்ள அவனும் வீட்டின் உள்ளே வர நிரஞ்சனா சென்று உடை மாற்றியவள் 

முட்டி அளவுள்ள ஸ்கர்ட் மற்றும் முழுக்கை டி ஷர்ட் ஒன்றை அணிந்து வெளியே வர மன்மதன் அவளை பார்த்து மதி மயங்கி போனான். 

 

அவள் அணிந்திருந்த இறுக்கி பிடித்த டி ஷர்ட்டில் உலோக உருண்டைகள் இரண்டு அவளின் நடைக்கு ஏற்ப நடனமாட அவன் கண்கள் அங்கே செல்ல உடனே அவன் கழுத்தில் இருந்த மாலையிலிருந்து உடலில் மின்சாரம் தாக்கியது மாலையை பிடித்து கொண்டே கண்ணை மூடி அமர்ந்திருந்தான் ஏனெனில் நிரஞ்சனா வேறு பார்க்க மிகவும் அழகாக இருந்தாள் எங்கே தான் எல்லை மீறி விடுவோமோ என்ற பயம் மன்மதனுக்கு. 

 

நிரஞ்சனா மன்மதனுக்காக பத்தே நிமிடங்களில் நூடுல்ஸ் செய்து எடுத்து வந்து கொடுக்க அவன் அதை பார்த்து பயந்தவன் “என்ன பெண்ணே இது சாப்பிடும் பொருள் தானா புழுவை போல மிதக்கிறது” என்று கேட்க “நூடுல்ஸ் சாப்பிடுங்க நல்லாருக்கும்” என்று கூற மன்மதன் முகச்சுளிப்புடனே எடுத்து வாயில் வைக்க ஆம் நன்றாக தான் இருந்தது அவனுக்கு பிடித்தும் இருந்தது இன்னொரு கிண்ணம் சேர்த்து வாங்கி சாப்பிட்டவன் ஏப்பத்தை விட்டு தண்ணீரை குடிக்க “நீ மட்டும் தனியாக தான் இருக்கிறாயா பெண்ணே உன்னுடன் உன் தாய் தந்தை இல்லையா” என்று கேட்க “அப்பா அம்மா துபாய்ல பிஸ்னஸ் பார்த்துக்குறாங்க இங்க நான் மட்டும் தான் இருக்கேன்” என்று கூற மன்மதனுக்கு ஆச்சரியம் “என்ன வளர்ப்பு இது பிள்ளைகளை தனியே விடுவது எங்கள் உலகத்தில் பெற்றோருடன் தான் பிள்ளைகள் இருப்பார்கள்” என்று புலம்பியவன் “சரி பெண்ணே நீ பத்திரமாக இரு” என்று கூறிவிட்டு அவன் அங்கிருந்து செல்ல போக “உங்க வீடு எங்க இருக்கு” என்று அவள் கேட்க “எனக்கு வீடு இல்லை பெண்ணே சாலை ஓரத்தில் எங்காவது படுத்து கொள்வேன்” என்றான் மன்மதன். 

 

“நீங்க தப்பா நினைச்சிக்கலன்னா இன்னைக்கு நைட் மட்டும் என் கூட தங்கிக்கங்க என் ரூம்மேட் வர வரைக்கும் பிளீஸ்” என்று கூற “அய்யய்யோ பெண்ணே நான் பெண்களுடன் தங்குவதே இல்லை இதோ பார் மாலை போட்டு விரதம் இருக்கிறேன் 45 நாட்களுக்கு விரதம்” என்றான்.

 

“இந்த வீட்டுக்கு வெளியே என்னை துரத்திட்டு வந்த அந்த பசங்க கார் நிக்குது அவங்க திரும்ப வந்துட்டாங்கன்னா எனக்கு பயமா இருக்கு” என்க மன்மதன் பால்கனி வழியாக அங்கே எட்டிப்பார்த்தான் ஆம் அந்த கார் அங்கே தான் நின்றது அதை பார்த்த மன்மதன் “சரி நீ சென்று படுத்து கொள் பெண்ணே நான் உனக்கு துணையாக நான் இன்று இரவு இங்கேயே இருக்கிறேன்” என்க நிரஞ்சனாவுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது. 

 

அவனுக்கு படுக்கை விரிப்பு தலையணை எடுத்து வந்து கொடுக்க அவன் ஹாலில் படுத்து கொண்டான் மன்மதன் படுக்கையை விரித்து படுத்து கொள்ள நிரஞ்சனா அறையின் உள்ளே சென்று படுத்தாள் இருப்பினும் பயத்தில் தூக்கமே வரவில்லை இங்கு மன்மதனுக்கோ இத்தனை அழகான பெண்ணுடன் இருப்பதால் தூக்கம் வரவில்லை. 

 

இருவரும் வெவ்வேறு மனநிலையில் படுத்திருக்க நள்ளிரவு வேலை நிரஞ்சனா மன்மதன் பக்கத்தில் கொஞ்சம் தள்ளி ஒரு பெட் ஷிட்டை விரித்து படுத்து கொண்டாள் அப்போது தான் அவளுக்கு உறக்கமே வந்ததது மறுநாள் காலை மன்மதன் தான் முதலில் கண் விழித்தான் தன் பக்கத்தில் போர்வையை இழுத்து போர்த்தி படுத்திருந்த நிரஞ்சனாவை பார்த்து ஒரு கணம் பயந்தேவிட்டான் தான் ஏதேனும் தவறு செய்து விட்டோமா என்று அவன் இரவு அணிந்திருந்த ஆடையை குனிந்து பார்க்க அது கசங்காமல் இருக்க அப்போது தான் நிம்மதியே வந்தது. 

 

அவளை தூக்கி சென்று படுக்கையில் படுக்க வைத்தவன் சோபாவில் சென்று அமர அடியில் டிவி ரிமோட் இருந்ததை அவன் கவனிக்கவில்லை அவன் அமர்ந்தவுடன் டிவியில் செய்தி ஒளிப்பரப்பானது “என்ன டா இது மனிதர்கள் இதன் உள்ளே சென்று பேசுகிறார்களா” என்று ஆச்சரியத்துடனே பார்த்தான். 

 

இன்றைய முக்கிய செய்திகள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரானா சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, 

அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது அதன்படி, அடுத்த 20 முதல் 30 நாட்களுக்கு முழு லாக்டவுன் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கும்

பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படும்

மேலும் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது மக்கள் அனைவரும் அரசு விதிமுறைகளை கடைப்பிடித்து, பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூற மன்மதன் அதிர்ச்சியுடனே செய்தியை பார்க்க நிரஞ்சனாவும் டிவி சத்தம் கேட்டு எழுந்து வந்தவள் தொலைக்காட்சியில் ஓடிய செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தாள். 

 

நிரஞ்சனாவின் அலைப்பேசி ஒலிக்க உடனே ஒலிக்க அதை எடுத்து காதில் வைத்து பேசினாள் அவளின் தாய் தந்தை தான் பேசினார் “அப்பா” என்று அவள் பேச 

“நிரஞ்சனா நியூஸ் பார்த்தியா” என்று கேட்க “இப்போ தான் பா பார்த்தேன்” என்றாள் “அடுத்த பிளைட் எப்போ விடுவாங்கன்னு தெரியலை டா விட்ட உடனே அப்பாவும் அம்மாவும் கிளம்பி வரோம் அதுவரை பத்திரமா அக்கெளன்ட்ல அப்பா பணம் போட்டு விடுறேன்” என்றார் அவளின் தந்தை. 

 

அவளும் சரியென தலையை ஆட்டிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டு வர மன்மதன் தான் விழி பிதுங்கி அமர்ந்து இருந்தான் இனி என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் “என்னாச்சு உங்களுக்கு” என்று அவள் விசாரிக்க “நான் இன்னும் 45 நாட்களுக்கு பூலோகத்தில் தான் இருக்க வேண்டும் இந்த பெட்டியில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று போட்டிருக்கிறார்களே என்ன செய்வது என்று தெரியவில்லை எனக்கு வீடே இல்லையே” என்றான் மன்மதன். 

 

“பரவாயில்லை நான் தனியா தான் இருப்பேன் நீங்க என் கூடவே தங்கிக்கங்க” என்றாள் நிரஞ்சனா “என்ன சொல்கிறாய் உன்னுடனா” என்று அவன் அதிர்ச்சியடைய 

அவளை அவனை வித்தியாசமாக பார்த்தாள் “உங்க பேச்சு ஏன் ரொம்ப வித்தியாசமா இருக்கு நீங்க மேடை நாடகத்துல நடிக்கிறிங்களா ஏதோ முனிவர் மாதிரி பேசுறிங்க ஆமாம் உங்க பெயர் என்ன” என்று கேட்டாள். 

 

“அனைத்திற்க்கும் காரணம் அந்த முனிவன் தான் என்னை இப்படி என்னை தவிக்க வைக்கிறோனே அனைத்தும் அவன் சதி தான்” என்று மன்மதன் புலம்ப நிரஞ்சனாவுக்கு அவன் பேசிய எதுவும் புரியவில்லை “உங்க பெயர் தானே கேட்டேன் என்ன என்னவோ பேசுறிங்க” என்று அவள் கூற “என் பெயரா மன்மதன்” என்றான். 

 

“மன்மதன்னு ஒரு பெயரா நீங்க எங்க இருந்து வரீங்க உங்க ஊர் எங்க இருக்கு” என்று கேட்க “அனைத்தையும் நேரம் வரும் போது சொல்கிறேன் பெண்ணே சோதனை மேல் சோதனையாக இருக்கிறது ‘அடேய் முனிவா’ என்று மனதில் கத்த அவன் கழுத்தில் இருந்த மாலையில் இருந்து அவன் உடலுக்கு மின்சாரம் தாக்கியது. 

 

“ஆஆஆ” என்று அவன் வலியில் அலற நிரஞ்சனா பயந்தேவிட்டாள் “என்னாச்சு உங்களுக்கு” என்று  மன்மதனிடம் கேட்க 

“ஒன்றுமில்லை பெண்ணே அது ஒரு விதமான வலி” என்று கூறியவன் “இந்த ஊரடங்கு எப்போது முடியும்” என்று கேட்க

“எனக்கு எப்படி தெரியும் மதன் ஒரு மாசம் ஆகும்ன்னு நினைக்கிறேன்” என்று கூற

அவளின் மதன் என்ற அழைப்பை நினைத்து ஆச்சரியப்பட்டவன் ‘இது கூட நன்றாக தான் இருக்கிறது’ என்று நினைத்தான். 

 

“சரி நீங்க சீக்கிரமா கிளம்புங்க மதன் நாம இந்த மாசத்துக்கு தேவையான காய்கறி எல்லாம் வாங்கிட்டு வரலாம்” என்க அவனும் தலையை ஆட்ட “சரி குளிச்சிட்டு நீங்க இங்கேயே இருங்க” என்று கூறிவிட்டு அடுத்து அரை மணி நேரத்தில் கிளம்பி வர 

மன்மதன் எதார்த்தமாக திரும்ப அடர் பச்சை நிற காட்டான் புடவையில் வந்து நின்றவளை பார்த்து மெய் மறந்துவிட்டான் புடவை முந்தானையை இடையில் சொருகி கொண்டு அவள் வேலை செய்ய அவளின் எலுமிச்சை நிற இடை மன்மதன் கண்ணை ஈர்த்தது உடனே அவன் உடலில் மின்சாரம் பாய ‘அய்யோ இந்த மாலையோடு மல்லு கட்ட என்னால் முடியவில்லையே’ என்று மனதில் நினைத்தான் மன்மதன். 

 

அங்கிருக்க முடியாமல் அவனும் குளிக்க சென்றான் இருவரும் கிளம்பி ஊரடங்குக்கு தேவையான காய்கறி பழங்கள் இதர பொருட்களை வாங்கி வர சென்றனர். 

 

வானுலகில் இருந்த மகாமுனிவர் இனி தான் உனக்கு கண்டமே இருக்கிறது மன்மதா என்று அவனை பார்த்து சிரித்தார் 

அவருடன் இருந்த சக முனிவர் “என்ன இருந்தாலும் மன்மதன் பாவம் முனிவரே” என்று கூற “என்னுடன் இருந்து கொண்டு அவனுக்கு வக்காளத்து வாங்குகிறாயா நீ” என்று அவர் கோபத்தில் முகம் சிவக்க 

“மகாமுனிவரே வானுலக ரம்பையை போல ஒரு பெண்ணை பக்கத்தில் வைத்து சாதாரண மானுடனாலேயே அமைதியாக இருக்க முடியாது அதுவும் மன்மதனால் எப்படி விரதம் இருக்க முடியும் அவன் பாவம் அல்லவா” என்று கூற முனிவரும் அவரை பார்த்து புன்சிரிப்பு சிரித்தவர் 

“அது தான் மன்மதனுக்கு வைக்கப்பட்ட விஷப்பரீட்சையே பார்ப்போம் தேர்ச்சி பெறுகிறானா” என்றார். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

    1 comment

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *