தீரா காதல் 5

அத்தியாயம் 5 இரவெல்லாம் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கொண்டு இருந்தான் சக்திவேல் அவ்வப்போது மனையாளையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டு தான் படுத்திருந்தான் அதிகாலை வேளையில் தான் கண்ணை மூடினான் மறுநாள் பொழுது விடிய பாண்டியம்மா வந்து அறையின் கதவையே பார்த்து கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தார்.  அவரின் மூத்த இரண்டு மருமகள்களும் சமையலறையில் இருந்து அந்த அறையையே தான் நோட்டம் விட்டு கொண்டு இருந்தனர் “எக்கா மணி பத்தாச்சு இன்னுமா இந்த சக்திவேலுக்கும் சக்திவேல் பொண்டாட்டிக்கும் விடியல” என்று இரண்டாவது மருமகள் முதலாவது மருமகளிடம் குறையாக கூற “அதான் எனக்கும் தெரியலை இந்த அத்தை நமக்கு கல்யாணம் ஆன புதுசுல என்ன பேச்சு பேசுனாங்க இவளை மட்டும் தூங்க விடுறாங்க” என்று புலம்பிக் கொண்டு இருந்தாள்.  ஒரு கட்டத்தில் பாண்டியம்மா அறையின் கதவை வேக வேகமாக கட்டியவர்  “அடேய் சின்னவனே நேரமாச்சு இன்னும் என்ன டா உறக்கம்”…

Premium Reader Subscription

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *