தீரா காதல் 3

அத்தியாயம் 3

 

தங்கமயில் அப்போது தான் குளித்துவிட்டு வந்திருக்க நீல நிற சுடிதாரில் கண்ணாடி முன்னே நின்று தலையே சீவிக் கொண்டு இருந்தாள் அவளின் நீளக் கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்டி கொண்டு இருக்க ஆடை நனைந்து அவளின் பின்மேனி மட்டும் தனித்து தெரிந்தது அவளை பார்த்து கொண்டே சக்திவேல் மெல்ல பூனையை உள்ளே வந்தான் அவள் மேலே துப்பட்டா அணிந்திராமல் இருக்க அவளின் சுடிதார் டாப்பின் இறக்கம் சற்று அதிகப்படியாக அவளின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மட்டும் தனித்து தெரிந்தது ஆம் அது அன்று அவன் அணிவித்த அதே தங்க சங்கிலி தான் இன்று வரை அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்தது. 

 

சக்திவேல் அவளின் பின்னே வந்து அவளின் இடையோடு கை நுழைத்து அவளை தன் மேனியோடு அழுத்தி பிடிக்க பெண்ணவள் அதிர்ந்து போனாள் கண்ணாடி வழியே தெரிந்த அவன் பிம்பத்தை பார்த்து அதிர்வுடனே விழி விரித்து பார்க்க அவளின் கை கால் எல்லாம் நடுங்கியது. 

 

அவனும் கண்ணாடி வழியாக அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான் “தங்க சிலை மாதிரி இருக்க டி” என்று கூறிக் கொண்டே இருந்தவனின் கை அவளின் இடையை இன்னும் அழுத்தமாக தன்னோடு சேர்த்தணைத்து பிடித்தது “இத்தனை பிரம்மச்சாரி விரதம் இருந்ததுல தப்பே இல்லை டி யானை பசிக்கு சோலைக்காடே கிடைச்ச மாதிரி இருக்கு” என்று அவள் காதில் தன் மீசை முடி உரச கூறியவனின் சூடான மூச்சுக்காற்று பட்டது அவளை தன் புறம் உடனே திருப்பியவன் அவளை சுவரோடு சுவராக சாய்த்து அவளுக்கு மிகவும் அருகில் நெருங்கி நின்றான் இருவருக்கும் இடையே காற்று கூட நுழைய முடியாத அளவுக்கு அவனின் நெருக்கம் இருந்தது. 

 

“மா…மா…மாமா வேண்டாம் த..ள்..ளி போங்க” என்று கூற தான் முடிந்தது அவன் நெஞ்சில் கை வைத்து அசைக்க முயல 

அவளின் கையை தன் நெஞ்சோடு அழுத்தி பிடித்து கொண்டவன் “கல்யாணத்துக்கு முன்னாடி வரை சும்மா இருக்க முடியாம்ன்னு தெரியல தங்கம்” என்று கூறியவன் அவளை தின்று ஏப்பம் விடும் நோக்கத்துடனே பார்க்க அவளின் வயிற்றிலோ புளி கரைத்தது அவளின் இதழை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கியவன் அவள் உயரத்துக்கு குனிய போக பெண்ணவள் கண்கள் இருட்டி கொண்டு வர மயங்கி அவன் மீதே சரிந்தாள். 

 

“அடிப்பாவி அது எப்படி தான் சரியான நேரத்துல மயங்கி விழறாளோ” என்று வாய்விட்டு புலம்பியவன் அவளை தூக்கி தோளில் போட்டு கொண்டு கீழே இறங்கி சென்றான். 

 

அவளை காரில் படுக்க வைத்து ஸ்டார்ட் செய்து எங்கோ சென்றான் தங்க மயிலின் முகத்தில் தண்ணீர் தெளிக்க பட மெல்ல கண்ணை திறந்தாள் தன் முன்னே மங்கலாக தெரிந்த உருவத்தை பார்த்தவள் தன் கண்ணை கசக்கி கொண்டு பார்க்க 

“தங்கமயிலு நான் தான் டி எழுந்துரு” என்க 

அடித்து பிடித்து கொண்டு எழுந்தாள் 

வீட்டில் தானே இருந்தோம் இங்கு எப்படி வந்தோம் என்று சுற்றி முற்றி பார்க்க அவள் ஒரு மரப் படகில் இருந்தாள் சுற்றி கடல்நீரை தவிர கண்ணுக்கு எட்டும் தூரம் வரை வேறு எதுவும் தெரியவில்லை. 

 

“இது.. இது.. என்ன இடம்” என்று கேட்க 

“எல்லாம் நம்ம இடம் தான் டி மயிலு” என்று கூறிக் கொண்டே அவள் தோளில் கையை போட்டவன் ஒரு இரண்டு நாளு நாம இங்க பக்கத்து இருக்க தீவுக்கு போய் சுத்தி பார்க்க போறோம்” என்று கூற அவளோ மீண்டும் தன் கண்ணை விரித்து பார்க்க

“என்ன டி எதுக்கெடுத்தாலும் உங்க அப்பனை மாதிரியே கண்ணை விரிச்சு விரிச்சு பார்க்குற சும்மா சொன்னேன் 

அம்மாவுக்கு தெரிஞ்சா வைய்யும் அதோ தெரியுது பாரு கரை அங்க போய் மீன் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போலாம்” என்றான் அப்போது தான் அவளுக்கு உயிரே வந்தது. 

 

இருவரும் கரை வந்து சேர தங்கமயில் இறங்க தெரியாது விழிக்க அவளின் இடையில் கைக்கொடுத்து தூக்கி கரையில் நிற்க வைத்தான் சக்திவேல் மாலை சூரியன் மெல்ல மறைந்து கொண்டு இருக்க வானம் பொன்மஞ்சள் நிறத்தில் காட்சி அளித்தது இருவரும் நின்று கொண்டே இருக்க சுட சுட மீன் மசாலா தடவி கல்லில் போட்டு எடுக்க தட்டில் வாங்கிய சக்திவேல் அவளிடம் கொடுக்க அவளோ தயக்கத்துடனே வாங்கி 

கொள்ள “சாப்பிடு டி” என்றான். 

 

“வேண்டாம்” என்று கூறியதது தான் தாமதம் “ஒழுங்கா வீடு போய் சாப்பிட வேண்டாமா” என்று அவன் விரட்ட அவளும் சாப்பிட ஆரம்பித்தாள் கடல் அலைகளுடன் மீன் சாப்பிட அந்த இடமே அத்தனை ரம்மியமாக இருந்தது 

அவள் சுற்றி வேடிக்கை பார்க்க அவள் மாமனின் கண்ணோ அவளிடம் தான் இருந்தது. 

 

கோழி கொரிப்பதை போல சாப்பிட்டு கொண்டு இருந்தவளின் இதழ்கள் காரத்தில் சிவந்து விட் அதை பார்த்து ரசித்தான் அடிக்கடி அதை அவள் நாவால் வருடி கொடுக்க அதை தன் நாவால் வருடி பார்த்தாள் எப்படி இருக்கும் என்று நினைக்க ‘கல்யாணம் வரைக்கும் பொறுமையா இரு டா’ என்று அவன் மனசாட்சி அவனிடம் கூற அமைதியானான்

அவளை மீண்டும் கரைக்கு அழைத்து வந்து வீட்டில் விட்டவன் “ஒழுங்கா நாளையிலருந்து காலேஜ்க்கு வா குடும்பத்துல ஒருத்தராவது ஒழுங்கா படிக்க வேண்டாமா நானே எட்டாம் கிளாஸ்சு அப்புறம் நம்ம புள்ளைங்க சந்தேகம் கேட்டா யாரு சொல்லி தர்றது” என்று கூற

‘இவருக்கு இதை தவிர வேற நினைப்பே இருக்காதா’ என்று மனதில் நினைத்தவள சரியென தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து செல்ல போக அவளின் கையை பிடித்த சக்திவேல் “நீ கவலைப்படாத நான் கல்யாணத்துக்கு முன்னாடி உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் நீ தைரியமா வந்து படி” என்றான் அவளின் கண்ணை பார்த்து அவளும் புரிந்தது என்று மேலும் கீழும் தலையை ஆட்டிவிட்டு வீட்டுக்கு சென்றாள். 

 

மறுநாளில் இருந்து அவளும் கல்லூரிக்கு 

வர ஆரம்பித்தாள் தினமும் அவளை பார்க்க சக்திவேல் வருவான் சாப்பிட ஏதேனும் வாங்கி வந்து கொடுத்தவிட்டு செல்வான் இதே கதை அடுத்து வந்த ஒரு மாதமும் தொடர்ந்தது. 

 

இன்னும் இரண்டே வாரத்தில் திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டு இருக்க தங்கமயிலுக்கு அதற்க்கு மேலும் அவனை சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை வீட்டை விட்டு ஓடி விடலாமா என்று நினைக்க அவனின் அடியாட்கள் எப்போதும் அவளுக்கு காவல் இருந்தனர் என்ன செய்யலாம் என்று நினைத்தவள் அன்று வழக்கம் போல கல்லூரிக்கு கிளம்பியவள் கல்லூரிக்கு செல்லாமல் ஆட்டோ பிடித்து ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றாள். 

 

அவள் டிக்கெட் எடுத்து கொண்டு அமரந்திருந்தாள் அவளின் பள்ளி தோழி ஒருத்தியின் வீடு கன்னியாகுமரியில் இருக்க அங்கே சென்று விடாலாம் என்று நினைத்து கிளம்பியிருந்தாள் அவள் இருக்கையில் அமர்ந்திருக்க அவளின் எதிரே அமர்ந்து இருந்தவன் அவள் தனியே அமர்ந்திருப்பதை பார்த்து குறுகுறுவென பார்த்தான் அவளோ சுற்றி முற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க அங்கு ஒருவர் கூட இல்லை அவளே அறியாமல் பயம் வந்து தொலைத்தது வீட்டுக்கே சென்று விடாலாமா என்று கூட தோன்றியது. 

 

அவள் தன் இருக்கையை விட்டு எழுந்து நடந்து செல்ல அந்த ரயில் முழுக்க காலியாக இருந்தது அவளை குறுகுறுவென பார்த்துக் கொண்டு இருந்தவனோ அவள் பின்னேயே வர அவனின் நோக்கம் என்னவென்று புரிந்தது அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள் அவனும் அவளை துரத்தி கொண்டே வர அவன் அவளை நெருங்கும் சமயம் தூரத்தில் இருந்து பறந்து வந்த ஒரு கண்ணாடி பாட்டில் அவன் தலையில் உடைந்து சிதறியது அடுத்த கணம் சக்திவேலின் அடியாட்கள் அவனை புடை சூழ அடி வெளுக்க ஆரம்பித்தனர். 

 

சக்திவேல் தூரத்தில் நடந்து வருவதை பார்த்து கை கால் எல்லாம் நடுங்க நின்றிருந்தாள் பெண்ணவள் 

தன்னை அடிக்க போகிறானோ இல்லை திட்ட போகிறோனோ என்று அவள் பயத்துடனே அவனை பார்க்க அவனும் அவளையே தான் பார்த்து முறைத்து கொண்டே அவள் அருகில் வந்தான் ஓடும் ரயிலில் இருந்து குதித்து விடலாமா என்று கூட தோன்றியது அவளுக்கு. 

 

ஆனால் சக்திவேலோ அவள் எதிர்ப்பார்த்த படி எதுவும் செய்யாமல் அவள் அருகில் வந்து அவளின் தோளில் கைப் போட்டு 

“என் தங்கம் ஓடி வர்றதுன்னா நீ மாமனையும் கூட்டிட்டு தான வந்துருக்கனும் எதுக்கு தனியா வந்து கஷ்டப்படுற கண்ட காளி பயலாம் உன் மேல உன் மேல கை வைக்க பார்க்குறானுங்க” என்று சாந்தமே உருவாய் பேச “மாமா சாரி மாமா நான் வந்தது தப்பு தான் என்னை விட்டுரு மாமா” என்று கூற 

அடுத்த கணம் அவளின் கன்னத்தை பதம் பார்த்தது அவன் கைகள் அவன் அடித்த அவள் மயங்கி தலை சுற்றி கீழே விழ அவளை தூக்கி தோளில் தூக்கி போட்டு கொண்டு ரயிலில் இருந்த நிறுத்தும் பிடியை பிடித்து இழுக்க ரயில் நின்றது அவன் இறங்கி அசால்ட்டாக அவளை தூக்கி செல்ல ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் அவனை தான் வேடிக்கை பார்த்தனர். 

 

அவளை தூக்கி வந்தவன் நேரே அவள் வீட்டுக்கு செல்லாமல் தன் வீட்டில் அவனுடயை அறைக்கே தூக்கி வந்து படுக்க வைத்தான் அவள் மயக்கம் தெளிந்து எழுந்து அமர அவனின் அண்ணிமார்கள் அவளை சூழ்ந்து கொண்டனர் அடுத்த நாளே திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட அன்றைய இரவு தூங்கா இரவாகி போனது பெண்ணவளுக்கு அவளின் பெற்றோரை கூட அவளால் பார்க்க முடியவில்லை எத்தனை நேரம் தூங்காமல் இருந்தாலும் இரவும் மறைந்து காலை  சூரியன் மெல்ல வந்தது பெண்ணவளுக்கு அலங்காரம் செய்ய ஒரு பொம்மையை போல தயாரானாள் சுற்றி எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது அவள் மணமேடைக்கு வந்து அப்போது தான் அவள் பெற்றோரையே பார்த்தாள் அவள் கண்களில் அத்தனை வலி இருக்க அவளின் பெற்றோரும் அவளை கண்ணீருடனே பார்த்தனர் “கெட்டிமேளம்  கெட்டிமேளம்” என்ற சத்தம் கேட்க சக்திவேல் அவள் கழுத்தில் தாலியை கட்டி மூன்று முடிச்சிட்டு முடித்தான். 

    1 comment

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *