தீரா காதல் 4
அத்தியாயம் 4 அவன் தாலி கட்டி முடிக்கவும் தங்கமயில் கண்கள் கலங்கி அமர்ந்திருக்க ஒற்றை கண்ணீர் துளி அவளின் கண்ணை தாண்டி வெளியே வந்தது அவளுக்கு எதிர்மறையாக சக்திவேலின் முகம் மலர்ச்சியுடன் இருந்தது எதையோ சாதித்துவிட்ட நினைப்பு திருமண சடங்குகள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்தது தங்கமயிலின் சகோதரன் அருண் மணமகனின் கையை பிடித்து செல்ல இருவரும் அக்னி குண்டத்தை வலம் வந்தனர். இறுதியாக அனைத்து சடங்குகளும் முடிய இருவரும் ஜோடியாக வீடு வந்து சேர்ந்தனர் தங்கமயிலின் முகம் வாடி இருந்தது அவளை சக்திவேலை அவன் அறைக்கு அழைத்து சென்றான் சக்திவேல் அறையின் உள்ளே வந்தவுடன் சோர்வுடனே படுக்கையில் விழ பெண்ணவள் என்ன செய்வது என்று தெரியாமல் படுக்கையில் அமர்ந்திருந்தாள் அவளை பார்த்தவன் “கொஞ்ச நேரம் படுத்து எழுந்துரு மயிலு சாய்ந்திரம் வரவேற்பு இருக்குல்ல” என்று கூற அவள் எங்கோ வெறித்து பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள். அவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றது சரியாக…